சென்னை : தேசிய காப்பீட்டுக் கழக நிறுவனத்தில் நிர்வாக அதிகாரிகள் பணிக்கு 205 இடங்கள் காலியாக உள்ளன. நாடு முழுவதும் உள்ள பட்டதாரிகள் இந்த நிர்வாக அதிகாரிகள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியின் தன்மை - நிர்வாக அதிகாரிகள் (பொது)
கல்வித் தகுதி -
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 60% மார்க்குகளுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியினைப் பெற்றிருத்தல் வேண்டும். (எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் 55% மார்க் பெற்றிருந்தால் போதும்)

வயது வரம்பு -
18 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். (01 மார்ச் 2017ம் தேதிக்குள் 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்)
ஊதியத் தொகை - ரூ. 32795 - 62315 / மாதம்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி -
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 2017 மார்ச் 30ம் தேதியிலிருந்து 2017 ஏப்ரல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை -
விண்ணப்பதாரார்கள் இரண்டு கட்ட எழுத்துத் தேர்வுகளை எழுத வேண்டும். முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்க் காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம் -
பொதுப்பிரிவினருக்கு ரூ. 600/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு ரூ. 100/- விண்ணப்பக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
முக்கிய விபரங்கள் -
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் - 2017 மார்ச் 30 முதல் 2017 ஏப்ரல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய நாட்கள் - 2017 மார்ச் 30 முதல் 2017 ஏப்ரல் 20ம் தேதி வரை விண்ணப்பக் கட்டணம் செலுத்தலாம்.
முதல்நிலைத் தேர்வு நடை பெறும் நாள்கள் - 2017 ஜூன் 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும்.
மெயின் தேர்வு நடை பெறும் நாள் - 2017 ஜூலை 2 அன்று நடை பெறும்.


Click it and Unblock the Notifications












