நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு

Posted By:

சென்னை: தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ லிமிடெட் நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு 984 பணியிடங்கள் காலியாக உள்ளன. நாடு முழுவதும் உள்ள பட்டதாரிகள் இந்த உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி -

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு

அவரவர் சார்ந்த மாநில பிராந்திய மொழியைப் பற்றிய போதிய அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.

வயது வரம்பு -

18 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். (30 ஜூன் 2017ம் தேதிக்குள் 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்)

ஊதியத் தொகை - Rs. 14435 - 40080 / மாதம்

விண்ணப்பிக்க வேண்டிய தேதி -

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 2017 மார்ச் 6ம் தேதியிலிருந்து 2017 மார்ச் 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை -

விண்ணப்பதாரார்கள் இரண்டு கட்ட எழுத்துத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

முக்கிய விபரங்கள் -

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் - 2017 மார்ச் 6 முதல் 2017 மார்ச் 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய நாட்கள் - 2017 மார்ச் 6 முதல் 2017 மார்ச் 29ம் தேதி வரை விண்ணப்பக் கட்டணம் செலுத்தலாம்.

முதல்நிலைத் தேர்வு நடை பெறும் நாள்கள் - 2017 ஏப்ரல் 22 மற்றும் 2017 ஏப்ரல் 23 ஆகிய நாட்கள் ஆகும்.

மெயின் தேர்வு நடை பெறும் நாள் - 2017 மே 23 அன்று நடை பெறும்.

இந்தத் தேர்வுப் பற்றிய முழு விபரங்களை தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ லிமிடெட் என்ற பெயரிலுள்ள இணையதளத்தில் மார்ச் 6ம் தேதியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

English summary
Eng summary : NIACL Recruitment 2017 has called for role of Assistant for any degree graduates all over India.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia