தேசிய புலனாய்வு ஏஜென்சியில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் வேலை...!!

Posted By:

சென்னை: தேசிய புலனாய்வு ஏஜென்சியில் (என்ஐஏ) டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விளம்பரம் வெளியான 2 மாதங்களுக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

தேசிய புலனாய்வு அமைப்பானது, நாட்டில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட மத்திய அரசின் அமைப்பாகும். முக்கிய வழக்குகளை விசாரணை செய்து வருகிறது இந்த அமைப்பு. மத்திய பயங்கரவாத தடுப்பு சட்ட அமலாக்க ஏஜென்சியின் கீழ் செயல்பட்டு வருகிறது. நாட்டிலுள்ள எந்த ஒரு மாநிலத்திலும் நடைபெறும் பயங்கரவாதச் செயல்களையும் விசாரிக்கும் அதிகாரம் படைத்தது இந்த அமைப்பு.

இந்த அமைப்பின் அலுவலகத்தில் 27 டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பணியிடங்களுக்கு விண்மப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் என்ஐஏ இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் The DIG (Adm), NIA HQ, 7th Floor, NDCC-II Building, Jai Singh Road, New Delhi-110001 என்ற முகவரிக்கு வந்து சேரவேண்டும்.

அதாவது மார்ச் 11-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு என்ஐஏ இணையதளமான http://nia.gov.in/-ல் காணலாம்.

English summary
NIA, New Delhi invited applications for 27 Data Entry Operator (DEO) posts on deputation basis. The eligible candidates can apply to the post through the prescribed format within 02 months from the date of publication of the advertisement in Employment News paper. Notification details Notification No.: E-78/002/IT-DA/NIA/2015/20379 dated: 30 November 2015 NIA, New Delhi Recruitment 2016 Vacancy Details Name of the Post: Number of Posts. Data Entry Operator (DEO) - 27 posts.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia