சென்னை: தேசிய சுகாதார இயக்கத்தில் (என்எச்எம்) மேலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தேசிய சுகாதார இயக்கத்தில் டெல்லி மாநிலப் பிரிவில் இந்தப் பணியிடங்கள் காலியாகவுள்ளன. மருத்துவமனை மேலாளர் பணியிடங்கள் 29-ம், உதவி மருத்துவமனை மேலாளர் பணியிடங்கள் 39-ம் காலியாக இருக்கின்றன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எம்பிஏ (சுகாதாரம் அல்லது மருத்துவமனை நிர்வாகம்) படித்திருக்கவேண்டும். மேலும் மருத்துவமனைகளில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் இருக்கவேண்டும்.
வயது 40-க்கு மிகாமல் இருக்கவேண்டும். உதவி மருத்துவமனை மேலாளர் பதவிக்கு 35-க்கு மிகாமல் வயது இருக்கவேண்டும்.
தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பங்களை SPMU, 6th Floor, B wing, Vikas Bhawan-II, Civil Lines, Delhi என்ற முகவரிக்கு பிப்ரவரி 5-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு http://nrhm.gov.in/nhm/about-nhm.html என்ற இணையதள முகவரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications












