தமிழ்நாட்டின் போட்டி தேர்வு வாரியங்களின் தகவல்கள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 விவகாரம் நீதிமன்றம் கேள்வி :

டிஎன்பிஎஸ்சி நடத்திய 2015 ஆம் ஆண்டு நடத்திய குரூப் ஒன் தேர்வு விடைத்தாள் வெளியான விவகாரம் குறித்து மதுரையை சேர்ந்த ஸ்வப்னா என்ற திருநங்கை தொடுத்த வழ்க்கினை சென்னை நீதிமன்றம் விசாரித்து வருகின்றது .

குரூப் ஒன் தேர்வின் வழக்கு அத்துடன் , ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு

இவ்வழக்கில் எதிர்மனுதாராக தனியார் தொலைக்காட்சி, மனித நேய அறக்கட்டளை அத்துடன் பாமாக நிறுவனர் இராமதாஸ், தின தந்தி, மாலை மலர் போன்ற பத்திரிக்கைளை சேர்த்துள்ளது. இது குறித்து விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம் அவர்களுக்கு மத்திய காவல்த்துறை குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை விசாரிப்பதாகவும் டிஎன்பிஎஸ்சி ஒத்துழைத்தால் நான்கு வாரத்திறகுள் வழக்கை முடிப்பதாக பதில்  தெரிவித்தனர்.

அரசு நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றவுள்ள அதிகாரிகள் நியமனத்தேர்வு என்பதால் இதனை நீதிமன்றம் மிக கவனமாக கையில் எடுத்துள்ளது . இதுகுறித்து காவல்த்துறை யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். அத்துடன் டிஎன்பிஎஸ்சி காவல்த்துறை கேட்கும் ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும், மேலும் இவ்வழக்கு தொடர்பான விசாரனை நவம்பர் 29 ஆம் தேதி சமர்பிக்க வேண்டும் என காவல்த்துறைக்கு உத்தரவிட்டதுடன் அன்றே விசாரணை நடத்தப்பட முடிவு செய்தது.

டிஎன்பிஎஸ்சி முழுவதுமாக வழக்குக்கு ஒத்துழைக்கும் என்று கருதப்படுகிறது . இதனையடுத்து எது உண்மை என தெரியவரும் . வரும் காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க வெளிப்படைத்தன்மையை டிஎன்பிஎஸ்சி பின்பற்ற வேண்டும் .

டிஎன்பிஎஸ்சியின் நடவடிக்கைகள் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும் என்பதனை டிஎன்பிஎஸ்சி அறிந்து செயல்படும் எனற நம்பிக்கையில் தேர்வர்கள் உள்ளனர். ஆதலால் இந்த வழக்கு முக்கியமாக ஒரு திருப்பமாக இருக்கும் என தேர்வர்களால் நம்பபடுகிறது.

கைத்தறி, சிறைத்துறை உயரதிகாரிகள் பணிபதவி பட்டியல்  :

கைத்தறி துணிநூல் சிறைத்துறை அதிகாரிகள் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டோர்  விவரம் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வுகளின் முடிவுகளை அதிகாரப்பூர்வ தளத்தில் காணலாம். 

ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் :

ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய விரிவுரையாளர் பணிகளுக்கான ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரிய இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து சான்றிதழ் சரிபார்க்கும் பணி நவம்பர் 23 அன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த பதிவுகள் :

டிஎன்பிஎஸ்சியின் குரூப் 4 மற்றும் விஏஒ தேர்வுகள் ஒன்றாக இணைப்பு ! 

English summary
here article tell about news of competitive exams of Tamil nadu

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia