தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி வெகுவிரைவில் முடிவடையும்

Posted By:

தமிழக  அரசின் புதிய பாடத்திட்டம் தயாரிக்க மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் ஈடுப்பட்டுள்ளன. பாடத்திட்டங்களை மாற்றும் பணி நடகின்றது . இதுவரை புதியபாட்த்திட்டங்கள் தயாரிக்கும் பணியில் 821 பேர் பாடவாரியாக புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்க பதிவுசெய்துள்ளனர் . இந்நிலையில் மாநில ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி கூறிகையில் புதிய பாடத்திட்டங்களை 1 முதல் 12 வரை மாற்ற அரசு ஆணை பிறப்பித்துள்ளது . அத்துடன் 1, 6,9,11 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் ஜனவரி மாததிற்க்குள் முடிவடையும் 2018 மற்றும் 2019 வருடங்களுக்கான பாடத்திட்ட மாற்றத்தில் அமல்ப்படுத்தப்படும் . ஆகவே  ஐஐடி, ஐஐஎம் அண்ணா பல்கலைகழக ஆசிரியர்களிடம் ஆலோசனை நடைபெற்று வருகின்றது என்று க. அறிவொளி தெரிவித்தார்.

புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி அரசு ஐஐடி, என்ஐடி ஆசிரியர்களிடம் கலந்துறையாடல்

இந்த ஆண்டு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதால் நீட் தேர்வு எழுதும் அளவிற்கு பள்ளி பாடத்திட்டங்கள் தரமானதாக இல்லை என விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன . மாணவர்கள் நீட் தேர்வு எழுத மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள் என்பதால் அரசு இதனை கருத்தில் கொண்டு பாடப்புத்தகங்களை மாற்றி சிபிஎஸ்இ தரத்திற்கு மாணவர்களை உருவாக்க முனைந்துள்ளது . ஆகவே 2018 முதல் மாணவர்களுக்கு புதியபாடத்திட்டங்கள் வழங்குவதன் மூலம் மாணவர்கள் நீட் தேர்வை சந்திக்க சிரமப்படவேண்டிய அவசியம் இருக்காது மற்றும் மத்திய அரசின் எந்த தேர்வையும் எளிதில்  எதிர்கொள்வார்கள் என பள்ளி கல்வியமைச்சர்  இதனை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

சார்ந்த தகவல்கள் :

பள்ளி கல்லுரிகளில் சட்டம் பாடமாக்கப்பட சட்டத்துறை அமைச்சர் அறிவிப்பு 

பாடத்திட்டம் தயாரிக்க ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.. கால அவகாசம் நீட்டிப்பு

English summary
here article tell about new syllabus

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia