புதிய பாடத்திட்டங்களுக்கான முன்னோட்ட வரையரை வெளியீடு ! கருத்து சொல்லுங்க

Posted By:

பள்ளிக்கல்வி பாடத்திட்டங்கள் முன்னோட்டத்தினை அரசு வெளியிட்டது. 2018 முதல் மாணவர்கள் தங்கள் பாடத்திட்டதை மாற்றுவது குறித்து அரசு வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை 14 வருடங்களுக்கு புதிய பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது.

புதிய பாடத்திட்டங்கள் குறித்து கருத்து கூறுவது குறித்து அறிவிப்பு

பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை பதினான்கு வருடங்களுக்கு பிறகு மே 22ல் புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வருவது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பிறகு தமிழக அரசு அண்ணா பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஆனந்த கிருஷணன் தலைமையில் கல்வித்திட்ட குழுவும் , பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் உயர்மட்ட குழுவும் அமைக்கப்பட்டது.

பள்ளிக்கல்வி இயக்குநர் உதயச்சந்திரன் மேற்ப்பார்வையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவொளி தலைமையில் கலைத்திட்டகுழு , துணை குழு, பாடப்புத்தகம் தயாரிக்கும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பலப்பாடத்திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன. சிபிஎஸ்சியின் பாடபுத்தகங்கள் அனைத்து ஆராயப்பட்டன, 2000 பேரிடம் கருத்து கேட்கப்பட்டன. அத்துடன் இவ்வாறு பெரும் குழுவாக இணைந்து உருவாக்கப்பட்ட இந்த பாடத்திட்டத்தின் வரைவினை முதல்வர் வெளியிட்டார்.

பாடத்திட்ட உருவாக்க தலைமை தலைவர் ஆனந்த கிருஷணன் வெளிநாடுகளான பின்லாந்து, சிங்கப்பூர் போன்ற பல்வேறு நாடுகளின் சிறப்பு திட்டங்களை இப்பாடத்திட்டத்தில் இணைத்துள்ளோம்.

முதல்வர் அறிக்கையில் மாணவர்கள் பிளஸ்2 முடித்த கையோடு அடுத்தடுத்த மாணவர்கள் வேலைவாய்ப்புக்கு உதவும் விதமாக கல்வி அமைய பாடங்களை திட்டமிட்டு அமைத்தோம் என கூறியுள்ளார்.பள்ளிக்கல்வித்துறையின் இணைய இணைப்பில் அனைத்து தகவலகளும் பெறலாம்.

பொதுமக்கள் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் இந்த புது வரைவினை பார்த்து அது குறித்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அத்துடன் ஜனவரி அது புதுப்பித்து பிப்ரவரியில் அந்த புத்தகம் முழுமை அடையும் அதன் பின் அவை அச்சக செயல்ப்பாட்டுக்கு கொண்டு செல்லப்படும் பின் அவை முழு பாடமாக உருவாக்கப்பட்டு வரும் கல்வியாண்டில் ஒன்று, ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு பாடங்களுக்கு புதிய பாடங்கள் கொண்டு வரப்படும். மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு  அனைத்து  வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள்  முழுமையாக மாற்றம் பெற்று பள்ளிகளில் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த பதிவுகள் :

புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி முடிவு பொதுமக்கள் கருத்து கேட்க அரசு தயார் 

டிசம்பரில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை எது முதல் சுதந்திர போர்? வேலூரா, பைகா புரட்சியா 

மாணவர்களுக்கு மும்மொழிக்கல்வி கற்பிப்பது குறித்து அரசு திட்டம்

English summary
here article tell about new syllabus of Tamil nadu education department

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia