சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 20 புதிய படிப்புகள் அறிமுகம்

Posted By:

சென்னை: நேவல் ஆர்க்கிடெக்சர், பெட்ரோலியம் எஞ்சினியரிங், ஓஷன் எஞ்சினியரிங், பயோ-மெடிக்கல் டெக்னாலஜி உட்பட 20 புதிய படிப்புகளை சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்துகிறது.

இதுகுறித்த அறிவிப்பில், "மாணவர்களின் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு வேல்ஸ் பல்கலைக் கழகம் புதுமையான படிப்புகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பி.டெக். நேவல் ஆர்க்கிடெக்சர், பெட்ரோலியம்எஞ்சினியரிங், பயோ-மெடிக்கல் டெக் னாலஜி, கோஸ்டல் மற்றும் ஓஷன்எஞ்சினியரிங் உள்பட புதிதாக 20 படிப்புகளை அறிமுகப்படுத்துகின்றோம்.

சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 20 புதிய படிப்புகள் அறிமுகம்

ஒவ்வொரு படிப்பிலும் தலா 60 பேர் சேர்க்கப்படுவர். இதற்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர்.

தேர்வு முடிவு மே 18 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. மேற்கண்ட படிப்புகளில் சேரும் சிறந்த மாணவர்களுக்கு டியூஷன் கட்டணச் சலுகை வழங்க முடிவுசெய்துள்ளோம்.

அதன்படி, பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் 95 சதவீதம் மற்றும் அதற்கு மேல் எடுத்தால் முதல் ஆண்டில் 50 சதவீத கட்டணச் சலுகையும், 90 சதவீதம் முதல் 94.99 சதவீதம் வரை பெற்றால் 40 சதவீதமும், 80 சதவீதம் முதல் 89.99 சதவீதம் வரை பெறுவோருக்கு 25 சதவீதமும் 70 சதவீதம் முதல் 79.99 சதவீதம் வரை எடுத்தால் 10 சதவீதமும் சலுகை அளிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.

English summary
Chennai Vels University announced various new studies in engineering field this year for students.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia