ஐஐடி மாணவர்களின் மன இறுக்கத்தை போக்க ஐஐடி மாணவர்களுக்காக கோரக்பூர் ஐஐடி சில நடவடிக்கை

Posted By:

ஐஐடி மாணவர்களின் மன இறுக்கத்தை போக்க ஐஐடி மாணவர்களுக்காக கோரக்பூர் ஐஐடி சில நடவடிக்கைகளை எடுக்க முன்வந்துள்ளது . சமிப காலமாக ஐஐடி மன இறுக்கம் காணமாக தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை பெருகிவருகின்றது அதனை தடுக்கவும் மாணவர்களுக்கு மன அழுத்ததிலிருந்து விடுவிக்கவும் கோரக்பூர் ஐஐடி முடிவெடுத்துள்ளது . அதன்படி மேற்குவங்க ஐஐடியானது தினமும் மாலை ஒரு மணி நேரம் ஐஐடி விடுதியில் லைட்ஸ் ஆஃப் என்னும் விளக்குகளை அனைக்கும் முறையை புகுத்தியது .இதன் படி மாணவர்கள் மாலையில் ஒரு மணி நேரம் மின்விளக்குகள் அனைக்கும்பொழுது மற்ற மாணவர்களுடன் மனம்விட்டு பேசமுடியும் . இதனால் மன இறுக்கம் தவிர்க்கலாம் . கோரக்பூர் ஐஐடியில் இதுவரை மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் .

மாணவர்களின் மனஇறுக்கத்தை போக்க மாநிலங்களில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது

கோரக்பூர் ஐஐடி மட்டுமல்ல தமிழ்நாட்டில் கட்டண பழுதாங்கமல் , கல்வி இறுக்கம் மற்றும் பல சமுக சிக்கல்களால் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கின்றனர் . மாணவர்களின் இந்த போக்கு குறையவே அரசு பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுளை வெளியிடும் போது தரவரிசை வெளியீட்டு முறையை இரத்து செய்தது .மேலும் தோல்வியுறும் மாணவர்களுக்கு மறுமுறை எழுத வாய்ப்புகள் வழங்கி மாணவர்களின் எதிர்கால வாழ்கைக்கு பிரகாசிக்க உதவுகிறது .

மாணவர்களின் மனஇறுக்கத்தை போக்க மாநிலங்களில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது

ஐஐடி மட்டுமல்ல தமிழ்நாட்டில் பொறியியல் கல்லுரிகளில் மாணவர்களை மிகுந்த இறுக்க நிலைக்கு தள்ளுகினறனர். தேவையில்லாத விதிமுறைகளால் மனதளவில் விருப்பின்றி படிப்பை தொடருகின்றனர் . மாணவர்களை மாணவர்களாக நடத்தினால் தேவையற்ற நடவடிக்கைகளில் மாணவர்கள் செல்வதை தடுக்கலாம், அவர்களது வாழ்வு சிறக்கும் . 

English summary
here article mentioned about actions taken by IIT to reduce stress of IIT students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia