புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி முடிவு பொதுமக்கள் கருத்து கேட்க அரசு தயார்

Posted By:

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பாடத்திட்டம் தயாரிக்கும் பணிகள் முழுமையாக முடிந்துள்ளது. மாறிவரும் அறிவியல் சூழல் மற்றும் திறன் மிகுந்த மாணவர்களை உருவாக்கவும் அத்துடன் அகில இந்திய அளவில் தரமான பாடத்திட்டங்களை உருவாக்கவும் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க தமிழக கல்வியியல் ஆராய்சி மற்றும் பள்ளி கல்வி இயக்குநரகம் இணைத்து புதிய பாடத்திட்டங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

மாணவர்களுக்கான பாடத்திட்டம் தயாரிக்கும் பணி முடிவு

மாணவர்கள் கல்வியில் சந்தித்து வரும் மாறுபட்ட இடர்கள் அனைத்தும் தீர்க்க அரசு முடிவெடுத்து செயல்பட்டது உயர்நிலை குழு, கலை திட்ட குழு என இருகுழுக்கள் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அசிரியர்கள் அனைவரும் 10 முறை கலந்துரையாடி புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இனி வரும் அடுத்த சிலநாட்களில் வரைவு திட்டம் வெளியிட அரசு முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து கல்வியியல் ஆராய்ச்சியாளர் மற்றும் பள்ளிக்கல்வித்துறையினர் கூற்றுப்படி புதிய பாடத்திட்டங்கள் தேசிய அளவில் தயாரிக்கப்படு உலக அளவில் சிறந்த வல்லுநர்களிடம் இருந்து கருத்து பெற திட்டமிட்டுள்ளது. புதிய பாடத்திட்டமானது தொழிற் கல்வி, வேலை வாய்ப்பு, மொழித்திறன், பொது அறிவு, தொலை நோக்கு பார்வை, கணக்கியல் நுணுக்கங்கள் போன்றவ்ற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்ட்டுள்ளது. மேலும் கற்பித்தல் முறை, வகுப்பறை சூழல், மாணவர்கள் கேள்விக்கு பதில் அளித்தலில் மாற்றம் இருக்கும் . அடுத்த சில நாட்களில் வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படும்.

பொதுமக்கள் கருத்து :

பொதுமக்களின் பார்வைக்கு இணையம் உருவாக்கப்பட்டு அவற்றில் மாற்றம் கொண்டு வர கருத்துகள் கேட்கப்படும் அனைத்து பாடங்களும் இணையத்தில் பதியப்படும் அத்துடன் ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். விடுப்பட்ட, மற்றும் பிழைகள் சேர்க்க வேண்டிய பாடங்கள் குறித்து மக்கள் அறிவிக்கலாம்.

2000 ஆசிரியர்களின் கடுமையான உழைப்பினால் உருவாக்கப்பட்ட பாடத்திட்டமானது 2018இல் 1,6,9,11 வகுப்புகளுக்கு பாட மாற்றம் தொடங்கும். பேராசியர்கள் ஆசிரியர்கள் அனைவரது உழைப்பினால் உருவான இந்த கல்வித்திட்டமானது அனைவரின் எதிர்ப்பார்ப்பையும் பூர்த்தி செய்வதுடன் மாணவர்களின் கல்வித்தரம் முழுவதுமாக உயர்த்தப்படும் என நம்பபடுகிறது தெரிவித்துள்ளது.

சார்ந்த பதிவுகள் :

தமிழக அரசின் குழந்தைகள் தின கொண்டாட்டம் மற்றும் மாணவர்களுக்கு உதவும் எண்கள் 

ஜனவரியில் ஜாம் ஜாமென டிஜிட்டலாக்கப்படும் தமிழக பள்ளிகள் !!

English summary
here article tell about new syllabus making for Tamil nadu school students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia