பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டங்கள் அறிமுகம்

Posted By:

பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணிகள் நவம்பர் 15 ஆம் நாளுக்குள் முடிவடையும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல் அளித்துள்ளார்.

மத்திய அரசின்  அனைத்து தேர்வுகளுக்கு மாணவர்களுக்கான  பயிற்சி மையம்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் தகவலின்படி மாணவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது . வேலைவாய்ப்பை உருவாக்கவும் மாணவர்களுக்கான திறம்பட பாடத்திட்டங்களை உருவாக்கவும் மத்திய அரசு கொண்டு வருகிற அனைத்து நுழைவுதேர்வுகளையும் மாணவர்கள் திறம்பட எதிர்கொள்ள மாணவர்களுக்கான சிறப்பான முறையில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும்.

மத்திய அரசின் கேட், ஐஏஎஸ், ஐபிஎஸ், நீட் மற்றும் எந்த வகை தேர்வையும் திறம்பட எதிர்கொள்ள மாணவர்களுக்கு தேவையான பயிற்சி மையங்கள் உருவாக்கப்படுகின்றன. முதல் கட்டமாக 400 பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும் . இனி வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கான சிறப்பான மையங்கள் உருவாக்கப்பட்டு அவர்களின் எதிர்காலம் வளமாக்கப்படும் .

அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கும் நாள் வரும்.32 மாவட்டங்களை  சேர்ந்த 256 மாணவர்கள் தங்கள் திறனை சிறப்பாக நடிப்பு திறனையும் வெளிப்படுத்த வேண்டும் என்று தனியார் விழாவில் பங்கேற்ற  கல்வியமைச்சர் கருத்து தெரிவித்தார். 

சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளிகளின் பாடத்திட்டம் மற்றும் பள்ளிகளின் செயல்பாடு இருக்கும். எதிர்காலத்தில் மாணவர்கள் திறம்பட செயல்பட சுமார்ட் வகுப்புகள் உருவாக்கப்படும் அத்துடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் கருத்து தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு இமேஜ் வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்றுதருவது குறித்து அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

சார்ந்த பதிவுகள்:

புதிய பள்ளி காலஅட்டவணை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் !!  

சிபிஎஸ்சி பாடத்திட்டங்களுக்கான அனுமதி தனியார் பள்ளிகள் குதுகலம் !!! 

மாணவர்களை திறம்பட உருவாக்க தமிழக துணை முதல்வர் பேச்சு!!

English summary
here article tell about development sachems of students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia