பள்ளிகளில் யோகா பயிற்சி அளிக்க திட்டம்

Posted By:

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநியமனவிழாவில் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்களுக்கான நியமனத்தை வழங்கி துவங்கி வைத்தார் முதல்வர்
எந்த துறைக்கும் இல்லாது கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ததாக அறிவித்தார் அரசு பள்ளிகளின் தரத்தை மேலும் உயர்த்திடும் வகையில் அதிநவீன கணினி கட்டமைப்பை உயர்த்தும் வகையில் உயர்கணினி தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் ஏற்ப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது . 

பள்ளிகளில் யோகா மற்றும் கலை போட்டிகள் நடத்த திட்டம்

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் 2315 பேர் மற்றும் 58 சிறப்பு ஆசிரியர்களுக்கான பணிநியமனவிழாவில் ஈரோடு, திருச்சி, தருமபூரி உள்ளிட்ட பகுதிகளின் ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன .

மாணவர்களின் சிறப்பு திறன் தன்மையை ஊக்குவித்து சிறந்த மாணவர்கள் நூறு பேரை தேர்வு செய்து பிறநாடுகளுக்கு பயணம் செய்து அவர்களது திறன் கண்டுபிடிப்புக்கு ஆதரவாக இருக்க திட்டமிடப்பட்டுள்ளது .

மாணவர்களிடையே 150 விதமான கலைநிகழ்வுகளை ஒருங்கே நடைத்தி அவர்களது தனிதிறனை கண்டுப்பிடித்து ஊக்குவித்து வளர்த்தல் போன்ற திட்டங்களை செயல்படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது என்றார் முதல்வர் .

யோகா பயிற்சி :

பள்ளிகளில் மாணவர்களுக்கான யோகா பயிற்சியை உறுதி செய்து அவர்களுக்கான ஒழுங்கு, கட்டுப்பாடு அத்துடன் அவர்களின் மன வளர்சியை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு சிறப்புகளை கொண்ட யோகா கலையை அனைவரும் பள்ளியில் பாடமாக கொண்டுவர அரசு முடிவெடுத்து அறிவுறுத்தியுள்ளது . ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் பயிற்சி மற்றும் பள்ளி உபகரணங்களை சரியாக பயன்படுத்துதல் போன்றவை ஆசிரியர்கள் நன்றாக அறிந்திருக்க வகை செய்யப்படும் .

பள்ளிக்கல்வித் துறைகளின் திட்டங்கள் திறம்பட செயல்படவும் பள்ளிகளின் சிறப்பை என்றும் தக்க வைக்க ஆசிரியர்களை தேவையான அளவில் நியமித்து காக்க வேண்டும் என அரசு முடிவெடுத்துள்ளது . பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே சரியான இணக்கம் உருவாக்க ஆசிரியர் திறம்பட இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

சார்ந்த பதிவுகள்:

தரமான கல்விக்கு ஆசிரியர்கள் மாணவர்கள் குறித்து கலந்துரையாடல் 

ஆசியர் பணியாளர் தேர்வு வாரியம் அடுத்தக்கட்ட ஆசிரியர்ப்பணிக்கு தேர்வு நடத்த தயார்!!  

English summary
here article tell about yoga practice for students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia