கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் வருகிறது திருத்தம்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted By:

சென்னை : குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ம் ஆண்டு கொண்டு வரப்பப்பட்டது. அதில் இந்த வருடம் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்படுவதற்காக மத்திய மந்திரி சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் 4 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வி வழங்குவதற்கு வகை செய்கிறது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் வருகிறது திருத்தம்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்

குழந்தைகள் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆணையம் குறைந்தபட்ச கல்வித்தகுதியினை நிர்ணயித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை பெற்றிராத ஆசிரியர்கள் அந்தத் தகுதியினை 2015 மார்ச் மாதத்திற்குள் பெற்றிருக்க வேண்டும் என்று ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று 22.03.2017ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் குறைந்தபட்ச கல்வி தகுதியை பெறுவதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 2015ம் ஆண்டிற்குள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியினை பெற வேண்டும் என்று கொடுக்கப்பட்டிருந்த கால அவகாசம் 31 மார்ச் 2019ம் வருடம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு ஆண்டுகள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடந்த மத்திய மந்திரிசபையில் குழந்தைகள் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை பெறுவதற்காக மேலும் நான்கு ஆண்டுகள் கூடுதல் அவகாசம் அளித்து குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

English summary
New Revision for the Teacher Qualification in Children's Education act. Qualification of the Teacher 4 Years extended. The new law has been passed.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia