'விரைவில் நாடு முழுவதும் புதிதாக 58 மருத்துவக் கல்லூரிகள்'

Posted By:

சென்னை: நாடு முழுவதும் விரைவில் 58 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படவுள்ளது என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டில் கூடுதலாக 5,800 மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய அமைச்சர் நட்டா தாக்கல் செய்த எழுத்துமூலமான பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'விரைவில் நாடு முழுவதும் புதிதாக 58 மருத்துவக் கல்லூரிகள்'

இதுதொடர்பாக அந்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: முதல் கட்டமாக 58 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளில் அமைக்கப்படும். ஒரு கல்லூரியில் 100 இடங்கள் என்ற அடிப்படையில் 5,800 மருத்துவ இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும். மத்திய அரசின் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பு என்ற திட்டத்தின் கீீழ் இவை அமைக்கப்படவுள்ளது.

மாவட்டங்களில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை இருந்து அங்கு மருத்துவக் கல்லூரி இல்லை என்றால் அந்த மாவட்டத்தில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.

மேலும் ஜெய்பப்பூரிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி தரம் உயர்தத்ப்படும் என்றார் அவர்.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia