தமிழ்நாட்டில் சுயநிதி பொறியியல் கல்லுரிகளில் கட்டண உயர்வு

Posted By:

தனியார் பொறியியல் கல்லுரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூபாய் பத்தாயிரம் அதிகரிக்கப்பட்டுள்ளது என உயர்கல்வி அமைச்சர் கே.அன்பழகன் அறிவித்துள்ளார் .

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லுரிகளில் ரூபாய் பத்தாயிரம்  கட்டண உயர்வு

சட்டமன்ற கூட்டத்தில் கேள்வி நேரத்தின் பொழுது பொறியியல் கல்லுரியில் மொத்தம் 2லட்சத்து77 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2016 ஆம் ஆண்டு கல்வியாண்டில் 1லட்சத்து 50ஆயிரம் மட்டுமே 599 இடங்கள் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர்க்கை நடைபெற்றுள்ளது. பொறியியல் கல்லுரிகள் தரத்தைமாணவர்கள் தான் நிர்ணயிக்கின்றனர். பொறியியல் கல்லுரிகள் ஆசிரியர்கள் , உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வக வசதிகள் மட்டுமே அரசு கண்காணிக்கும் . பொறியியல் கல்லுரிகளில் மூன்றாண்டுகளுக்கொருமுறை கல்லுரிகட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம் ஆனால் கடைசியாக 2012-2013க்கு பின் இப்போதுதான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் கல்லுரிகளான சுயநிதி கல்லுரிகள் நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க கமிட்டி அமைத்து கட்டணங்கள் மாற்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனியார் பொறியியல்  கல்லுரிகளில்  இத்தகைய கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது  ஆகும் . மேலும் இது வழக்கமான ஒன்றாகும் .மேலும் தமிழ்நாட்டில்  பொறியியல் கல்லுரிகள் சில மூடப்பட்டுள்ளது மற்றும் பொறியியல் கல்லுரிகளில் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

English summary
Here article tell about engineering fees structure

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia