பள்ளிகல்வித்துறைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கல்வி செயலர் பிரதீப் யாதவ்

Posted By:

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு இரு செயலர் என அறிவித்த அரசு ,
பள்ளி கலவித்துறை செயலராக பிரதீப்யாதவ் என்பவரை நியமனம் செய்துள்ளது. சேலம் , கடலூர் , சிவகங்கை மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம் செய்துள்ளார்கள் .
பள்ளிக் கல்வித்துறை செயலராக பிரதீப்யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளி கல்வித்துறை செயலராக ஏற்கனவே இருந்த உதயசந்திரன் தொடர்வார் பாடத்திட்டம் தொடர்பான பணிகளை கவனிப்பார்.

பள்ளிக்கல்வித்துறைக்கு இரு கல்வி செயலர் தமிழக அரசு நியமித்துள்ளது

ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை செயலராக இருக்கும் உதயசந்திரன் அவர்கள் பிரதீப் யாதவ் கட்டுப்பாட்டில் இயங்குவார் . கூட்டுறவு உணவு பாதுகாப்பு முதன்மை செயலாளராக இருருந்தவர் பிரதீப் யாதவ் .

திடிர் மாற்றம் :

ஏன் இந்த திடிர் மாற்றம் உதய சந்திரன் சிறப்பாக செயல்ப்பட்டு கொண்டிருக்க ஏன் இந்த இரு செயலர்கள் என்ற கேள்வி பொதுமக்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகின்றது . அரசின் தந்திர வேலையாக இது இருக்குகின்றது . மக்களிடம் இருந்து எதிர்ப்பை சமாளிக்க அதே நேரத்தில் சிறப்பாக செயல்ப்படு கொண்டிருக்கும் கல்வி செயலர் டி.உதயசந்திரன் அவர்களை கட்டுப்படுத்த அரசு கையாண்டுள்ள தந்திர வழியாக இருக்கின்றது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் .

உதயசந்திரன் சாதனை, தனியார் பள்ளிகள் வேதனை:

உதய சந்திரன் அவர்கள் கல்வி செயலராக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்தார் . 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு அறிவித்தார், மாவட்டங்களில் சிறந்த ஊராட்சி பள்ளிகளை தேர்ந்தெடுக்க புதிய திட்டங்களை வகுத்தார். ஆர்ட் கேலரிகள் அமைத்து மாணவர்ளை அறிவாக்க அறிவுறுத்தினார் . தரவரிசை முறையை நீக்கி மாணவர்களுக்கு ஏற்படும் மனஉலைச்சலை குறைத்தார். அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகரான போட்டிக்களமாக மாற்றினார். தனியார் பள்ளிகள் மிகுந்த பாதிப்படைந்தது ஆதலால் அரசுக்கு நெருக்கடி கொடுத்து உதயசந்திரனை மாற்ற திட்டமிட்டனர். ஆனால் உதயசந்திரனுக்கு பாராட்டுகளும் , ஆதரவு அதிகரித்தது. பாடத்திட்டங்களை மாற்றுதல் சிபிஎஸ்சிக்கு நிகராக பள்ளி பாடத்திட்டத்தை  உருவாக்க திட்டமிட்டுள்ளது.  தனியார் பள்ளிகளின் நெருக்கடியால்     தமிழக அரசு தந்திரமாக செயல்பட்டு  சிறப்பாக செயல்படு வரும் கல்வித்துறைக்கு புதிய ஒருவரை நியமித்து கல்வித்துறைக்கு இரு செயலர்கள் என உதய சந்திரனை முடக்கும் செயலாகவே கருதப்படுவதாக கல்வியல வல்லுநர்களிடையே பரவலான கருத்தாக இருந்து வருகின்றது .

சார்ந்த பதிவுகள்:

தமிழக பள்ளிகளின் வளர்ச்சி மேம்பாட்டுக்கு உருதுணையாக இருந்த கல்வித்துறை செயலர் மாற்றமா 

English summary
here article tell about new education secretary appointed by government of Tamilnadu

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia