புதிய பள்ளி காலஅட்டவணை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் !!

Posted By:

அரசு பள்ளிகளில் கால அட்டவணையில் குழறுபடிகள் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அட்டவணை முறை கிடப்பில் போடப்பட்டுள்ளன . நிகழாண்டு முதல் நடைமுறை படுத்தப்பட்டு வந்த கையேடுகள் பின்ப்பற்றப்படாமல் கைவிடப்பட்டுள்ளது .

புதிய பள்ளிகளுக்கான காலஅட்டவணையில் நடைமுறை சிக்கல் ஆசிரியர்கள் எதிர்ப்பு

தமிழகத்தில் பழைய காலஅட்டவணை முறை மாற்றப்பட்டு புதிய காலஅட்டவணை முறை அறிமுகப்படுத்தப்படுப்பட்டு முன்னோட்டம் பார்க்க தமிழக கல்வித்துறை திட்டமிட்டது . அதன்படி மாணவர்களுக்கு புதிய காலஅட்டவணை அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்தில் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் .

மாநிலத்தில் முன்னோட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழாண்டு அமல்ப்படுத்தப்பட்ட திட்டம் அடுத்தாண்டு முதல் மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் சிக்கல்கள் எழுந்துள்ளன .

சார்ந்த பதிவுகள்:

அடடே!!,, இமேஜ் மேங்கில் பாடங்களை கற்கபோகும் தமிழகப் பள்ளி மாணவர்கள் !!!

புதிய கால அட்டவணைப்படி 9.10 முதல் 9.20 இறை வணக்கம் ,
9.20. 10.50 தியானம் நாள்தோறும் ஒரு பாடத்தில் குருந்தேர்வு , 10.50 முதல் 11 இடைவேளை 11 - 12 பாடவேளை, 12-12.20 எளிய பாடப்பயிற்சி ,
12.20- 1 மதிய உணவு இடைவேளை

1-2 மணி வரை சொல்வதை எழுதுதல் செய்திதாள் வாசித்தல் 2- 2.40 பாடம் நடத்துதல் ,2.40 முதல் 2.50 இடைவேளை , 2-50 முதல் 3.30 - 4.10 உலக தரம் வாயந்த திரைப்படம் காணபித்தல் , வினாடி வினா, செயல்முறை பயிற்சி, அறிவியல் , மன்ற செயல்பாடுகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது . மேலும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 20 நிமிடம் தாமதமாக தொடங்கி 20 நிமிடம் நேரம் எடுத்து முடித்து கொள்ளலாம் .

படித்தல் ,பேசுதல், வினவுதல் , அறிதல் , கேட்டல், போன்ற பல்வேறு திறன்களை வெளிப்படுத்துதல் . கற்றலின் பல்வேறு நிலைகளை அடைதல் பெற்றோர் ஆசிரியர்கள் சந்தித்தல் மூன்று வாரங்களுக்கு ஒரு முறை என பல திட்டங்களை கொண்டிருந்தது .

ஆனால் மாணவர்கள் உணவு உண்ண காலதாமதப்படுத்துவதால் ஆசிரியர்கள் மாணவர்கள் உண்டபின் சென்று சாப்பிட தாமதமாகிறது என்று ஆசிரியர்கள் அதனை எதிர்த்து அத்திட்டங்களை பின்ப்பற்ற மறுப்பு தெரிவித்துள்ளனர் .

அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் அத்துடன் ஆசிரியர் சங்கங்கள் இதனை எதிர்த்து போராடுகின்றனர் . இதனையடுத்து புதிய கல்வித்திட்டங்களான கல்விமுறைக்கு அரசு என்ன மாற்றங்களை கொண்டுவரும் என எதிர்ப்பார்பில் ஆசிரியர்கள் உள்ளனர். 

சார்ந்த பதிவுகள்:

பள்ளிகளில் யோகா பயிற்சி அளிக்க திட்டம்  

புதியப்பாடத்திட்டத்தில் கணினி பாடம் 3 ஆம் வகுப்பு முதல் 10 வரை

English summary
here article tell about new education schedule issues in Tamil nadu schools

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia