டிசம்பரில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை எது முதல் சுதந்திர போர்? வேலூரா, பைகா புரட்சியா

Posted By:

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை குறித்து மத்திய மனிதவள மேம்ப்பாட்டு அமைச்சர் தனது அறிவிப்பில் தெரிவித்தார் . திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய கல்வியாளர்கள் மாநாட்டை துவக்கி வைத்து பேசிய மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் இந்தியாவில் சுதந்திர காலம் முதல் கல்வி கொள்கைகள் திறம்பட அமைக்க மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளதனை அறிவித்தார். இது குறித்து டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும் என்றார் .

டிசம்பரில் புதியக் கல்வி கொள்கை மத்திய அரசு அறிவிப்பு

டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் புதிய கல்வி கொள்கையில் பல்வேறு ஆக்கப்பூர்வ மாற்றங்களை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது . பிரிட்டிஸ் கால மனப்பான்மையிலிருந்து பிரதிபலிக்கும் கொள்கையை விடுத்து வர அரசு பெரும் சவாலாக எடுத்து செயல்பட்டு வருகின்றது . உலக நாடுகளுக்கிணையான கல்விகொள்கையை கொண்டு வர அரசு திட்டமிட்டு ஆலோசித்து வருவதாக அறிவித்தார்.

புதிய கல்விமுறையை கொண்டு வர ஆரம்ப நிலை கல்வியை தரம் உயர்த்துதல் மற்றும் உயர் கல்வியை எளிதில் கிடைக்கச் செய்தல் அத்துடன் அதிக மக்களுக்கு கல்விக்கிடைக்கச் செய்தல் போன்ற மூன்று கருத்துக்களை அரசு முன்னிருத்தி செயல்படுத்த திட்டமிட்டு வருகின்றது.

புதிய கல்விகொள்கையில் மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக்க உருவாக்க அரசு திட்டமிட்டு வருகின்றது . அத்துடன் உலக நாடுகளின் கல்வித்தரத்தினை விட சிறப்பானதாக உருவாக்கி அத்துடன் ஏற்கனவே உள்ள கல்வி முறையில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து புதிய முறையில் சிக்கலற்ற கல்வியை புகுத்த அரசு திட்டமிட்டு வருகின்றது .

மேலும் தரம் வாய்ந்த கல்வியை பெற இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படித்து வருகின்றனர் அதனை தடுக்க சர்வதேச நாடுகளுக்கு நிகராக கல்வித்தரத்தை கொண்டு வர அரசு நீண்ட ஆலோசணையில் உள்ளது .

இந்தியாவில் புதியக்கல்வி கொள்கை அமைக்குப்பணியை தொடங்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அவருடன் ஒன்பது உறுப்பினர்கள் இணைந்து உருவாக்கிய புதியகல்வி கொள்கையை  . சமிபத்தில் உருவாக்கப்பட்ட அக்குழுவிற்கு காலவரம்பு எதுவும் அரசு நிர்ணயிக்கவில்லை.

முதல் சுதந்திர போர் 1817 ஆம் ஆண்டு ஒடிசாவில் உருவாக்கப்பட்ட கஜபதி மன்னர்களின் கீழ் அப்படை இருந்து வந்தது. 1817 வெள்ளையர்களின் ஆட்சிக்கு எதிராக தொடங்கிய போரே முதல் சுதந்திரப்போர் என வருங்காலத்தில் பைகா புரட்சி என படிப்பார்கள் என மத்திய அமைச்சர் ஜாவேதகர் அறிவித்தார்.

வேலூர் புரட்சி 1806 முதல் சுதந்திர போரா இல்லையா!!!

ஆங்கிலேயரை எதிர்த்து உருவாக்கப்பட்ட 1806 ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட புரட்சியை குறித்து மத்திய அரசுக்கு மாநில அரசு அறிவிக்க வேண்டும் . நாட்டிலேயே தமிழகத்தில் உருவாக்கப்பட்ட வேலூர் கோட்டையில் நடத்தப்பட்ட புரட்சியையும் அதன் விளைவை குறித்தும் தமிழக அரசு மத்திய அரசுக்கு அறிவிக்க வேண்டும் . புதிய கல்விகொள்கையினை டிசம்பர் மாதம் அறிவிக்கவுள்ள மத்திய அரசுக்கு தமிழக அரசு நிச்சயம் இது குறித்து விளக்க வேண்டும். இதன்மூலம் முதல் சுதந்திரபோர் வேலூர் புரட்சி என படிக்கலாம்   இதனை நினைவு படுத்துவதில் கேரியர் இந்தியா தழிழ் கல்வித்தளம் கடமைப்பட்டுள்ளது. 

சார்ந்த பதிவுகள்:

மத்திய மனிதவள மேம்பாட்டு குழு நாட்டின் புதியகல்வி கொள்கை கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைந்துள்ளது 

தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி வெகுவிரைவில் முடிவடையும் 

English summary
here article tell about new policy of education system

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia