மத்திய மனிதவள மேம்பாட்டு குழு நாட்டின் புதியகல்வி கொள்கை கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைந்துள்ளது

Posted By:

புதிய கல்விகொள்கை இந்தியாவில் கொண்டுவர மத்தியஅரசு அறிவிப்பு.
நாட்டின் புதிய கல்வி கொள்கைக்காக அரசு புதிய கல்விகொள்கை கொண்டு வர திட்டமிட்டுள்ளது . மத்தியில் பாஜாக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டாவது முறை புதிய கல்விகொள்கைக்காக இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு அமைத்துள்ளது. இக்குழுவில் ஒன்பது உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஸ்மிருதி இராணி கல்வி அமைச்சராக இருக்கும்போது 2015ல் முன்னாள் கேபினட் தலைவர் டி.எஸ்.ஆர் சுப்பிரமணியன் தலைமையில் குழுவை நியமித்தது. இக்குழுவானது மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஜாவேத்கர் பிரகாஷ் அவர்களிடம் மே 7, 2016ல் தனது அறிக்கையை சமர்பித்தது . ஆனால் அக்குழுவின் அறிக்கையில் பிற்போக்கான கொள்கைகள் உள்ளன என பல்வேறு கட்சிகள் குற்றம் சாடி விமர்சித்தன .

புதிய கல்வி கொள்கை இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மற்றும் ஒன்பது பேர் குழு தயாரிக்கும்

இந்நிலையில் மத்திய மனிதவள் அமைச்சர் ஜாவேத்கர் புதிய கல்விகொள்கை அமைக்க இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி இரங்கன் தலைமையில் தற்பொழுது நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது . இக்குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அல்போன்ஸ் கானம்தானம் அவர்கள் திறமை வாய்ந்தவர், இவர் கேரள கோட்டயம் , எர்ணாக்குள மாவட்ட 100 % கல்விக்கு காரணமாக இருந்தவர் ஆவர் . குழுவின் மற்ற உறுப்பினர் இராம் சங்கர்குரீல் மத்தியபிரதேச பாபாசாகேப் அம்பேத்கர் பல்கலை கழகத்தின் துணை வேந்தர் ஆவர் மற்றும் இவர் விவாசாய அறிவியல் மற்றும் மேலாண்மையில் அனுபவம் வாய்ந்தவர் .

புதிய கல்வி கொள்கை இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மற்றும் ஒன்பது பேர் குழு தயாரிக்கும்

இதுவரை இந்தியா நான்கு முறை கல்விகொள்கை கொண்டு வந்துள்ளது 1968 இந்திரா முதல் 2005 மன்மோகன் சிங் வரை கல்வி கொள்கைகள் இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்பொழுது ஐந்தாவது ஆயுத்த தொடக்கம் இக்கொள்கை அறிமுகப்படுத்தும்பொழுது இதன் முழு போக்கு அறியமுடியும் . எனவே அடுத்த தலைமுறைக்கு ஆரோக்ய சூழலில் வாழ்வதற்கான அடித்தளமே இந்த புதிய கல்விகொள்கை என நம்பலாம்.

English summary
here article tell about new education policy

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia