புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அவற்றில், இனி எம்.பில்., படிப்பு நிறுத்தப்படுவதாகவும், உயர்கல்விக்கு இடையே ஒரு சில ஆண்டுகள் விடுப்பு எடுத்துக் கொண்டு மீண்டும் கல்வியைத் தொடரலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் புதிய தேசியக் கல்விக் கொள்ளைக்கு மத்திய அரசு ஜூலை 29ம் தேதியன்று திடீரென ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியாவில் எம்.பில்., (M.Phil.,) படிப்புகள் நிறுத்தப்படுவதாக புதிய கல்விக் கொள்கையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக, அடுத்த 15 ஆண்டுகளில் இணைப்புக் கல்லூரி முறை நிறுத்தப்படும்.
மேலும், உயர்கல்வி படிப்புகளில் விடுப்பு எடுத்து மீண்டும் படிக்க முடியும். அதாவது, பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியில் சேரும் மாணவ, மாணவிகள் ஒரு சில ஆண்டுகள் விடுப்பு எடுத்துவிட்டு மீண்டும் கல்வியைத் தொடர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












