தமிழக அரசு ஐ.டி.ஐ.களில் புதிதாக 9 பாடப் பிரிவுகள்

Posted By:

சென்னை: தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் எட்டு அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில்(ஐடிஐ), வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் 9 புதிய தொழில் பிரிவுகள் தொடங்கப்படும் என்று தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ப.மோகன் சட்டசபையில் தெரிவித்தார்.

சட்டசபையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது நேற்று விவாதங்கள் நடைபெற்றன. அந்த விவாதங்களுக்கு அமைச்சர் மோகன் பதிலளித்து வெளியிட்ட அறிவிப்பு:

தமிழக அரசு ஐ.டி.ஐ.களில் புதிதாக 9 பாடப் பிரிவுகள்

தமிழகத்தில் நடப்பாண்டில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் வேலைவாய்ப்பைத் தரும் புதிய தொழில் பிரிவுகள் தொடங்கப்படவுள்ளன.

அதன்படி, கடலூரில் மெரைன் இன்ஜின் பிட்டர் பிரிவும், கோவையில் டிஜிட்டல் போட்டோகிராபர், பரமக்குடியில் சூரிய சக்தி சாதனங்கள் பராமரிப்பு-மகளிருக்கென துணி வெட்டுதல்-தைத்தல் பிரிவுகள், போடியில் எலக்ட்ரீசியன் பிரிவும், அரக்கோணத்தில் மொபைல் போன் தொழில் பிரிவும், திண்டுக்கல்லில் ஏ.சி. தொழில் பிரிவும், திருச்சியில் மின்தூக்கி தொழில் பிரிவும், சேலத்தில் வர்ணம் பூசுபவர் தொழில் பிரிவும் தொடங்கப்படும் என்றார் அமைச்சர் மோகன்.

English summary
Nine New courses has been started in Tamilnadu Government ITIs in this academic year, Labour Minister Mohan has informed in Tamilnadu Legislative Assembly Yesterday.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia