இந்த வருஷம் கட்டணம் எவ்வளவோ.. பள்ளி கல்விக் கட்டண நிர்ணய குழுவிற்கு புதிய தலைவர்!

Posted By:

சென்னை : தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டண விகிதங்களை நிர்ணயிப்பதற்காக, நீதிபதி டி.வி. மாசிலாமணி புதிய கல்விக்கட்டண நிர்ணய குழுத்தலைவராக நியமிக்கப்பட்ள்ளார்.

கடந்த ஆண்டு முழுவதும் கட்டணக் கமிட்டியின் தலைவர் நியமிக்கப்படாத இருந்த நிலையில் நேற்று புதிய தலைவராக நீதிபதி டி.வி. மாசிலாமணி நியமிக்கப்பட்டார்.

புதிய தலைவர் நியமிக்கப்பட்டிருப்பதால் முடக்கப்பட்டிருந்த பணிகள் யாவும் செயல்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. புதிய தலைவர் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை இவர் நிர்ணயிப்பார்.

கல்விக்கட்டணச் சட்டம்

2009ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண விகிதங்களை நிர்ணயிப்பதற்காக தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தும் சட்டம் இயற்றப்பட்டது.

5 பேர் கொண்ட குழு

தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.

கமிட்டியின் பணி

தனியார் பள்ளிகள், நர்சரிபள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் கல்விக்கட்டணத்தை ஐந்து பேரை உறுப்பினராகக் கொண்ட கமிட்டி நிர்ணயித்த்து.

கமிட்டியின் தலைவர்கள்

கமிட்டியின் முதல் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்த ராஜன் நியமிக்கப்பட்டார். அவருக்குப்பின் ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைவரானார். அவர் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதால் 2012ல் விலகினார். பின்பு 2012 ஜனவரி மாதம் ஓய்வு பெற்ற நீதிபதி சிங்கார வேலு தலைவராகப் பொறுப்பேற்றார். அவர் 2015 டிசம்பர் 31ல் ஓய்வு பெற்றார்.

வேலை முடங்கியது

2015 டிசம்பம் மாதத்திற்குப் பின் கட்டணக்கமிட்டியின் பணிகளைக் கவனிக்க தலைவர் யாரும் நியமிக்கப்படாததால் கட்டணக் கமிட்டியின் வேலைகள் அனைத்தும் முடக்கப்பட்டது.

புதிய தலைவர் நியமனம்

கடந்த ஆண்டு முழுவதும் கட்டணக் கமிட்டியின் தலைவர் நியமிக்கப்படாத இருந்த நிலையில் நேற்று 22.03.2017 கட்டணக் கமிட்டியின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி டி.வி. மாசிலாமணி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மூன்று ஆண்டுகள் பணியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த ஆண்டு முழுவதும் கட்டணக் கமிட்டியின் தலைவர் நியமிக்கப்படாத இருந்த நிலையில் நேற்று 22.03.2017 கட்டணக் கமிட்டியின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி டி.வி. மாசிலாமணி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மூன்று ஆண்டுகள் பணியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

English summary
Retired Judge T.V. Masilamani has been Appointed as the new Chairman for Education fees Determination committee by the Tamilnadu Government.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia