மருத்துவபடிப்பிற்கு நீட் தேர்வு மட்டும் போதுமா? பிளஸ் 2 மதிப்பெண் கட்டாயமா? மாணவர்கள் குழப்பம்....

Posted By:

சென்னை : மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனால் நீட் தேர்வு மார்க் மட்டும் போதுமா அல்லது பிளஸ்-2 மதிப்பெண்ணும் முக்கியமா என்ற குழப்பம் மாணவர்களிடையே ஏற்பட்டது.

சிபிஎஸ்இ மாணவர்களின் குழப்பத்தை தீர்க்கும் விதத்தில் பதில் அளித்துள்ளது. நீட் தேர்வு தேர்ச்சியும் அத்துடன் 12ம் வகுப்பில் 50% மதிப்பெண் பெற்றிருந்தால்தான் மருத்துவப் படிப்பில் சேர முடியும் என தெரிவித்துள்ளது.

மே 7ம் தேதி எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இதற்கு 11.37 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மருத்துவபடிப்பிற்கு நீட் தேர்வு மட்டும் போதுமா? பிளஸ் 2 மதிப்பெண் கட்டாயமா? மாணவர்கள் குழப்பம்....

கிட்டதட்ட பத்து மொழிகளில் நாடெங்கும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள முக்கிய நகரங்களில் நீட் தேர்வினை சிபிஎஸ்இ நடத்த உள்ளது.

நீட் தேர்வினைக் குறித்த சந்தேகங்களை களைவதற்காக கோவை, குனியமுத்துாரைச் சேர்ந்த, கலை ஆசிரியர் நலச் சங்க தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார், தகவல் அறியும் உரிமை சட்டத்தில், சி.பி.எஸ்.இ., தலைமை அலுவலகத்தில், தகவல் கேட்டிருந்தார்.

அதற்கு, சி.பி.எஸ்.இ. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, பிளஸ் 2வில், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்பவியலான, 'பயோ டெக்னாலஜி' மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில், குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், தலித், பழங்குடியின மாணவர்கள், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் மட்டும், 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.

பொது பிரிவு மாற்றுத்திறனாளி மாணவர்கள், 45 சதவீதம், மற்ற மாற்றுத் திறனாளிகள், 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம். இந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், நீட் தேர்வு தகுதி மதிப்பெண் பட்டியலில், இடம் பெற்றிருந்தால் மட்டுமே, மருத்துவம் படிக்கும் தகுதி பெறுகின்றனர். என சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

English summary
Neet test score and 50% pass in 12th grade exam. Accordingly, the CBSE has stated that students will be admitted to medical courses.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia