நாளைக்கு நீட் தேர்வு எழுதப் போறீங்களா.... இதை படிச்சிட்டு போங்க...!

Posted By:

சென்னை : நீட் தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, நீட் தேர்வு மையத்திற்குள் மாணவர்கள் பரிசோதிக்கப்பட்டே அனுப்பப்படுகின்றனர்.

அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் படிப்பில் சேர, நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்' என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மொத்தம், 11 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்; அவர்களில், 80 ஆயிரம் பேர், தமிழக மாணவர்கள். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை சேர்ந்த, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். தேர்வு எழுபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

1. நீட் தேர்விற்கு செல்லும் மாணவர்கள் 9 மணிக்குள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் அதற்குப் பின் வரும் மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

நாளைக்கு நீட் தேர்வு எழுதப் போறீங்களா.... இதை படிச்சிட்டு போங்க...!

2. தேர்வு மையத்திற்குள் எந்த வித உலோகப் பொருட்களையும் மாணவ மாணவியர்கள் கொண்டு செல்லக் கூடாது. தேர்வுக் கூடத்திற்குள் மாணவர்கள் கடுமையாக சோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.

3. செல்போன், கால்குலேட்டர், பென்டிரைவ், போன்ற பொருட்களுக்கு அனுமதி இல்லை. மாணவர்கள் முழுக்கை சட்டை போடக் கூடாது. அரைக் கை சட்டைத்தான் போட வேண்டும். சாதாரண காலணிகள்தான் உபயோகிக்க வேண்டும். சூ போன்றவற்றை போடக் கூடாது.

4. மாணவர்கள் திண்பண்டம் மற்றும் தண்ணீர் போன்றவற்றை எடுத்துச் செல்லக்கூடாது. தேர்வு மையத்திலேயே தண்ணீர் வசதிகள் மற்றும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

5. மாணவ மாணவியர்கள் வாட்ச் , பவுச், பிட் பேப்பர், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், போன்றவற்றை தேர்வு அறைக்கு எடுத்துச் செல்லக் கூடாது. ஸ்கேனர் போன்ற பொருட்கள் கொண்டு சென்றால் அவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

6. மாணவ மாணவியர்கள் தேர்வு அறைக்கு தேர்வு நடைபெறும் நேரத்திற்கு முன்னதாகவே செல்லுவது நல்லது. தேர்வு அறைக்குச் சென்ற உடன் அமைதியாக இருங்கள். ரிலாக்சாக இருந்தால்தான் நாம் எழுதும் தேர்வில் தவறு ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

7. மூன்று மணி நேரம் தேர்வு நடைபெறவிருக்கிறது. மூன்று மணி நேரமும் நீங்கள் உங்கள் சிந்தனையை ஒருமுகப்படுத்தி, ரிலாக்சாக யோசித்து நிதானமாக தேர்வினை எழுதுங்கள். தெரிந்தவற்றிற்கு முதலில் பதில் அளியுங்கள். பின்னர் மற்றவற்றிற்கு யோசித்து பதில் அளியுங்கள்.

8. தெரியாததைப் பற்றி அதிக நேரம் யோசித்து நேரத்தை வீணாக்காமல் தெரிந்ததை முதலில் எழுதுங்கள். தேர்வுக்கு செல்லும் போது கட்டாயம் காலை உணவை சாப்பிட்டுவிட்டு தேர்வுக்குச் செல்லுங்கள்.

9. தேர்வு மையத்திற்குச் சென்ற உடன் பலர் புத்தகங்களை வைத்துக் கொண்டு பரபரப்பாக படித்துக் கொண்டிருப்பார்கள் அதைப் பார்த்து பயந்து விடாதீர்கள். கடைசி நேரத்தில் படிப்பது நல்லதல்ல. முடிந்த வரை மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள்.

10. தேர்வுக்கு முந்தைய நாள் (இன்று இரவு) நன்றாக தூங்கி எழுந்து தேர்வுக்குச் செல்லுங்கள். தேர்வுக் குறித்த பயத்தே முழுமையாக அகற்றி விடுங்கள். தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் தேர்வினை எதிர் கொள்ளுங்கள்.

ஆல் தி பெஸ்ட் மாணவக் கண்மணிகளே

English summary
Neat selection will be held tomorrow. These restrictions are imposed on the selection and students are being tested into the NEET Examination Center.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia