நீட் தேர்வால் மருத்துவ படிப்பு கிடைக்காமல் மாணவி தற்கொலை

நீட் விவகாரத்தால் இறந்த தமிழக பிளஸ் 2 மாணவி அனிதா

By Sobana

கொந்தளிக்கும் தமிழ்நாடு அரியலூர் மாவட்ட மாணவி வாழ்க்கை ஜோக்கர் கதையாய் போனது , நீதிமன்ற படியேறியும் நீதி கிடைக்கவில்லை இனி நான் வாழ்ந்து என்ன பயன் என்று வாழ்வை துரந்து வான்சென்றால் வண்ணமயிலவள் இனி அவளுக்கு வாழ்வில்லை ,,,
நீட் தேர்வுக்காக தன் உயிரை மாய்த்து கொண்டாள் இன்று நாடே அவளுக்காக போராடியிருக்கின்றது இருந்தபோது அவளின் உயிர்திரும்ப பெறமுடியாது நீட் தேர்வினால் மனம் உடைந்த அனிதா என்ற மாணவியின் தற்கொலைக்கு யார் தார்மீக பொறுப்பு எடுப்பார்கள் என்ற கேள்விகளுடன் மாணவியின் இறப்புக்கு ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளிப்பை தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது .

அடிப்படை வசதிகூட கிடைக்காத நிலையில் போராடி பிளஸ் 2 வகுப்பில் 196.5 கட் ஆஃப் மதிபெண் பெற்றாள் அனிதா ஆனால் கிராமத்தில் பிறந்த கிளிக்கு நீட் என்னும் நகரத்து வாசம் அறியவில்லை . நீதி மன்றத்தில் முறையிட்டால் முடிவு கிடைக்காததால் முடித்துகொண்டால் வாழ்வை .

நீட் தேர்வால் கனவு படிப்பு  கிடைக்காமல் தற்கொலை செய்துகொண்ட மாணவி

அரசு மட்டுமா காரணமா, இல்லை சுயநல சமுகமா !!!

நீட் தேர்வு என்ற ஒன்றை முன்னறிவிப்பின்றி வைத்தது ஒரு தவறு என்றால் அதனை அங்கிகரித்தது அடுத்த தவறு , நாட்டு மாணவர்களை அறிவாக்குறேன் என்று அனயாதையாக நிர்கதியில் நிற்க வைத்தது ஒரு தவறு என்றால் அரியலுர் மாணவி தற்கொலைக்கு அதுமட்டுமே காரணமா என்று சிந்தித்தால்,, ஒட்டுமொத்த அரசு பள்ளியில் படித்த மாணவர்களும் , 85% கிராமத்து மாணவர்களுக்கான இடஒதுக்கீடு எதிர்த்து மெத்த படித்த சுயநல மாணவர்கள் கொடுத்த வழக்கும் ஒரு காரணமாகும் .

ஒரு சக மாணவி வழக்கு தொடுத்தபோது வேடிக்கை பார்த்த அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் அதனை வேடிக்கைப்பார்த்தனர் . அவளுடன் இணைந்து போராட கேள்வி கேட்க யாரும் முன்வரவில்லை. இப்படியிருக்க இன்று அவள் இறந்தபின் டாக்டர் பட்டம் கொடுத்து கொந்தளிக்கும் மாணவர்களை என்ன செல்லி புகழ்வதென்று புரியவில்லை.,,

சிபிஎஸ்சி மாணவர்கள்:

கிராமபுரத்து மாணவர்களுக்கு கொடுக்கப்படும் 85 % சதவிகித ஒதுக்கீட்டினை எதிர்த்து வழக்கு தொடுத்து சிபிஎஸ்சியில் பயின்ற எங்களின் வாய்ப்புக்கு பங்கம் வரும் என்ற எண்ணத்துடன் வாதாடி வழக்கைவென்ற சிபிஎஸ்சி மாணவர்களும் ஒரு காரணம் தான் , சக வயது ஏழை மாணவர்கள் படிக்கட்டும் என்ற எண்ணமில்லாமல் சுயநலமாக செயல்பட்ட மாணவர்களும் தன் பிள்ளைகளின் வாழ்வே பெரிதென நினைத்த உதவிய பெற்றோர்களும் ஒரு காரணமாவார்கள் .

ஆக அரசை எதிர்த்து ஒன்றுப்பட்டு நின்று கருத்து தெரிவித்து போராட துணியாத சக அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களும் , தன் வயது ஒத்த ஏழை கிராமத்து மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 85% இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு தொடுத்த சுயநல எண்ணத்துடன் செயல்பட்ட மாணவர்களும் காரணமாவார்கள் .

அனிதாவுக்காக அன்று குரல் கொடுக்காதவர்கள் இன்று இறப்புக்குபின் எங்கள் வீட்டு பிள்ளையென்று போராடுவதில் என்ன நியாயம் அனிதா சுயநல சமுகத்தால் கொல்லப்பட்டுள்ளாள் அரசு ஒரு காரணம் என்றால் சுயநல சமுகம் முழு காரணம் ஆகும் .
இன்று இறப்புக்குப்பின் சமூக வலைதளத்தில் நியாயம் கேட்பது என்ன நியாயம் என்று புரியவில்லை, வீதியில் நின்று போரடி என்ன பயன் என்று புரியவில்லை தவறுகள் நடக்கப்படும் போதே தட்டிகேட்க துணிவில்லாமல் வாழும் நமது சமுகம் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் . அனிதாவின் மரணத்தில் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளையும் , சுயநல சூட்டில் குளிர்காயும் திரையை கிழித்து எரியுங்கள் இனிமேலாவது சரியான நேரத்தில் தவறை தட்டிகேட்போம் எதிர்காலத்தை காப்போம் ..

சார்ந்த பதிவுகள்:

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about neet exam issues
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+