மத்திய அரசு விறு விறு.. தமிழகத்தில் 3 இடங்களில் நீட் தேர்வு!

Posted By:

சென்னை : நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையில் மத்திய மனிதவள அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தமிழகத்தில் நாமக்கல், வேலூர், திருநெல்வேலி ஆகிய மூன்று இடங்களிலும் நீட் தேர்வு நடத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்தை மீட்பதற்காக பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது இதுதொடர்பாக இன்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலாளர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்துள்ளனர்.

அவர்களுக்கு முன்பு நீட் தேர்விலிருந்து தமிழகத்தை மீட்பதற்காக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன். மேலும் அவருடன் சுகாதாரதுறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் அடங்கிய தமிழக அதிகாரிகள் குழு ஒன்று பிரதமரின் செயலாளரைச் சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதுக் குறித்து வலியுறுத்தினார்கள்.

நீட் தேர்வு

இது போன்று பல அரசியல் தலைவர்களும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று தொடர்ந்து கூறிக் கொண்டும் போராடிக் கொண்டும் இருக்கிறார்கள். இந்த நிலையில் நீட் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெறும் எனவும் அதற்கான முடிவுகள் ஜூன் 8ம் தேதி வெளியிடப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

நீட் தேர்வு

நீட் தேர்வு என்பது தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வாகும். இது மத்திய அரசால் நடத்தப்படும் ஒரு தேர்வாகும். நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டது. இது மருத்துவம் மற்றும் பொறியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்கைக்காக தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வாகும்.

பிரகாஷ் ஜவடேகர் டிவிட்டர்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கேட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையில் மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தமிழகத்தில் மூன்று இடங்களில் நீட் தேர்வு நடத்தப்படும் என தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கூடுதல் இடங்கள்

நீட் தேர்வு தேசிய அளவில் நடைபெறும் தேர்வாகும். இந்தத் தேர்வு இந்தியா முழுவதும் நடைபெறும் தேர்வாகும். இந்தியா முழுவதும் 80 இடங்களில் நீட் தேர்வு இது வரை நடைபெற்றது. ஆனால் இந்த வருடம் கூடுதலாக 23 இடங்களில் நீட் தேர்வு நடத்தப்படும் என மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் மேலும் 3 இடங்கள்

தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்பதற்காக சட்டமன்றத்தில் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதல் பெற்று மத்திய அரசின் முடிவை எதிர்நோக்கி இருக்கிறது. இந்த நிலையில் மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தமிழகத்தில் நாமக்கல், வேலூர், திருநெல்வேலி ஆகிய மூன்று இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் எனக் கூறியுள்ளார்.

English summary
Prakash Javadekar (Minister of Human Resource Development) has told Choose three places in Tamil Nadu for neet examination 2017.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia