மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவு இன்று நாடு முழுவதும் வெளியீடு..!

Posted By:

சென்னை : மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவு இன்று நாடு முழுவதும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவ மாணவியர்கள் http://cbseresults.nic.in/neet17rpx/neetJ17.htm மற்றும் cbseneet.nic.in என்ற இணையதளத்திற்குச் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

நீட் தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்கள் http://cbseresults.nic.in/neet17rpx/neetJ17.htm மற்றும் cbseneet.nic.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு தேர்வு முடிவினைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவு இன்று நாடு முழுவதும் வெளியீடு..!

நாடு முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு மே 7ந் தேதி நடந்தது. இதில் 11 லட்சம் பேர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நீட் தேர்வினை எழுதினார்கள். இதற்கான முடிவுகள் இன்று வருமா நாளை வருமா என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர் மாணவ மாணவியர்கள். பல சர்ச்சைக்குப் பின் ஜூன் 23ந் தேதி இன்று நீட் ரிசல்ட் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இணையதளத்தில் மாணவ மாணவியர்கள் தங்கள் பெற்ற மதிப்பெண், அகில இந்திய ரேங்க் என அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். இதைத் தொடர்ந்து சிபிஎஸ்இ அகில இந்திய ரேங்க் பட்டியலை வெளியிடும். அதன் பிறகு மாநில அளவில் அரசு இடஒதுக்கீட்டிற்கான 85% இடத்திற்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Above article mentioned about neet exam result released today.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia