நீட் தேர்வுக்காக ராஜஸ்தான் மாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு அந்த மாநிலத்தின் தமிழ் சங்கம் உதவ முன் வந்துள்ளது. 2018-19-ம் ஆண்டிற்கான எம்பிபிஎஸ்., பிடிஎஸ். மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே -6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது தமிழக மாணவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்வு மைய ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இதில் மாற்றம் செய்ய முடியாது என்று சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர்களுக்கு ராஜஸ்தான் தமிழ் சங்கம் அனைத்துவிதமான உதவிகளும் ( உணவு, உறைவிடம், வாகன உதவி) செய்ய தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
உதவி தேவைப்படுவோர் கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
முருகானந்தம் (9790783187)
சௌந்தரவல்லி (8696922117)
பாரதி (7357023549)
நீட் தேர்வு எழுத கேரளா செல்லும் மாணவர்களின் உதவிக்கு சில...


Click it and Unblock the Notifications












