இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கு... அடுத்த ஆண்டு முதல் நீட் கட்டாயம்..!

Posted By:

சென்னை : இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி போன்ற படிப்புகளுக்கு அடுத்த ஆண்டு முதல் கட்டாயம் நீட் தேர்வு எழுத வேண்டும் என மத்திய ஆயுஷ் இணையமைச்சர் ஸ்ரீபத் யஸோ நாயக் அறிவிப்பு

மத்திய அரசின் ஆயுஷ்ஷின் கீழ் வரும் அனைத்து இந்திய மருத்துவ படிப்புக்களான சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் ஹோமியோபதி போன்ற படிப்புகளுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் நீட் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும் என மத்திய ஆயுஷ் இணையமைச்சர் ஸ்ரீபத் யஸோ நாயக் தெரிவித்துள்ளார்.

 இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கு... அடுத்த ஆண்டு முதல் நீட் கட்டாயம்..!

அடுத்த கல்வியாண்டு முதல் யோகா மற்றும் இயற்கை முறை சிகிச்சைக்கான படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும்.

சித்த மருத்துவப் படிப்புக்கும் நீட் கட்டாயம் எழுத வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து விரிவான தகவல்கள் விரைவில் மத்திய மனித வள அமைச்சகத்தின் மூலம் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மருந்தில்லா மருத்துவப் படிப்பு மற்றும் இயற்கைச் சார்ந்த மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ மாணவர்களிடையே பெரும் பரபரப்பு காணப்படுகிறது.

English summary
Central Ayush Minister Sripat Yaso Nayak has announced that the next year's mandatory Neet Examination for Indian Medicine and Homeopathy.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia