நீட் தேர்வுக்கு கிராமபுற மாணவர்கள் எழுத அரசு என்ன செய்ய போகிறது

நீட் தேர்வுக்கு பயிற்சி மையம் ஒன்றியத்திலிருந்து தேவைப்படுகிறது

By Sobana

நீட் தேர்வுக்கு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி மையங்கள் ஒன்றிய அளவில் தொடங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது . இந்தியாவில் இன்று மிகச்சிறந்தவர்களாக உள்ளவர்கள் அனைவரும் அரசு பள்ளியில் படித்துவந்தவர்கள்தான் .

நீட் தேர்வு குறித்து மாணவர்கள் சிறப்பாக செயல்பட அரசு செய்ய போவதென்ன

இந்தியாவில் ஒரே கல்வித்திட்டம் கொண்டு வரவேண்டும் . நீட் தேர்வானது கிராமத்தில் இருந்து மாணவர்களை கொண்டுவருவதை தவிர்க்கின்றது , இனிமேல் கிராமத்திலிருந்து நீட் தேர்வினால் மருத்துவம் படிக்க மாணவர்கள் முன்வருவதை தொடர்ந்து தவிர்க்கும் . மாணவர்களின் வெற்றிக்கு இது முட்டுக்கட்டையாக உள்ளது .

நீட் தேர்வால் மருத்துவ படிப்பு கிடைக்காமல் மாணவி தற்கொலைநீட் தேர்வால் மருத்துவ படிப்பு கிடைக்காமல் மாணவி தற்கொலை

கல்வி என்பது இதுநாள் வரை பொதுப்பட்டியலில் உள்ளது ஆதலால் மத்திய அரசு சிபிஎஸ்சி கல்வியையும் , மாநில அரசு மாநில கல்வியையும் அளித்து வருகின்றது இதனால் சமநிலை பாதிப்படைகின்றது .

இந்தியா முழுவதும் ஒரே கல்வியை கொண்டுவரும் நோக்குடன் நிகர்நிலை பல்கலைகழகங்களில் அவற்றின் கட்டண கொளையை தடுக்க நீட் தேர்வு மூலமாக நாடுமுழுவதும் ஒரே முறையில் தேர்வு அமைத்து மருத்துவ மாணவர்களை தேர்ந்தெடுக்க முடிவெடுத்தது மத்திய அரசு .

தவறான நீட் கொள்கை:

இந்தியா முழுவதும் ஒரே கல்வி இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வருவது குறித்து நீண்ட ஆய்வு செய்து முடிவு செய்து அவற்றை நாம் முழுவதும் முடித்தப்பின்பு மட்டுமே நீட் தேர்வு குறித்து கொண்டு வர திட்டமிட்டிருக்க வேண்டும் . நாடுமுழுவதும் ஒரே பயிற்றுவிக்கும் முறை, ஒரே பாடத்திட்டம் , ஒரே தேர்வுமுறையை கொண்டு வந்தபின்னர் உச்சநீதிமன்றம் அது குறித்து முடிவு செய்திருக்க வேண்டும் .

இந்தியா முழுவதும் மாணவர்கள் 6 முதல் 12 வகுப்பு வரை கல்விமுறையை ஆய்ந்து பாடத்திட்டத்தை குறித்து ஒரு திட்டமிடல் செய்திருக்க வேண்டும் . மேலும் 2 முதல் மூன்றாண்டுகள் கால அவகாசம் செய்திருக்க வேண்டும் . கிராமப்புற மாணவர்களை மனதில்கொண்டு திட்டங்களை வகுத்திருக்க வேண்டும் . அதனை செய்ய தவறியது அரசு மற்றும் சரியான தீர்ப்பு வழங்காது செயல்ப்பட்ட நீதிமன்றமும் இதுகுறித்து சிந்திக்க மறுத்தது மிக்பெரிய அநீதியாகும் .

இனி என்ன செய்ய போகிறார்கள் என தெரியவில்லை ... இனி என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து செயல்படும் அரசு என்று குருட்டுத்தனமான நம்பிக்கையில் இன்றைய மாணவர்கள் ..

சார்ந்த பதிவுகள்:

நீட் தேர்வு எதிர்த்து அதிகரித்து வரும் போராட்டங்கள் ,,!நீட் தேர்வு எதிர்த்து அதிகரித்து வரும் போராட்டங்கள் ,,!

நீட்தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை ! வலுக்கும் போராட்டம்!!,,நீட்தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை ! வலுக்கும் போராட்டம்!!,,

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about neet exam coaching and neet issues
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X