தமிழகத்தில் இன்றுடன் பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் அனைத்தும் வெளியாகிவிட்டன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சியில் முழுவீச்சில் இறங்கியுள்ளனர்.
இதனிடைய கோவையில் கட்டாயக் கல்வி சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் படி முறையாக மாணவர்களை தேர்வு செய்வதில்லை எனவும், பள்ளியில் சேர்த்தாலும் உடனடியாக கட்டணத்தை கட்ட பள்ளிகள் வருபுறுத்துவதாக பெற்றோர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் அங்காங்கே கல்விக் கட்டண பிரச்னைகள் தலைதூக்கியுள்ள நிலையில், திமுக எம்பி கனிமொழி தனது டுவிட்டரில்,
பல தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ப்ளஸ் ஒன் சேர்க்கையின்போது, பெற்றோர்களிடம் நீட் பயிற்சி என்ற பெயரில் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் கட்டணம் வசூலித்து வருகின்றன; மறுக்கும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு சீட் மறுக்கப்படுகிறது. இந்த பகல் கொள்ளையை பள்ளிக் கல்வித் துறை தடுப்பதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகள் முறைகேடு.. கோவை மாவட்ட கல்வி அலுவலகம் முற்றுகை


Click it and Unblock the Notifications












