நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!

Posted By: Kani

நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இளநிலை படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு (NEET). இந்தாண்டு மே, 5ல், நாடு முழுவதும் நடக்க உள்ளது.

இந்நிலையில், தேர்வுக்கான, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை, சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

விதிமுறைகள்:

  • தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே, தேர்வறைக்கு வர வேண்டும்.
  • சோதனைக்கு பின்பே, தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவர்.
  • மாணவர்கள், அரைக்கை சட்டையுடன், பேன்ட்டும், மாணவியர், சுடிதார் ஆடைகளையும் அணியலாம்.
  • ஆடைகளில், பெரிய பொத்தான்கள், பேட்ஜ், கிளிப் உள்ளிட்டவை இருக்கக் கூடாது.
  • மாணவியர், தலையில், பூ வைத்து வரக் கூடாது.
  • மாணவர்கள் செருப்பு மட்டுமே அணிய வேண்டும்; ஷூ அணிந்து வரக் கூடாது.
  • மாணவியர், குதிகால்கள் மறைக்கும் வகையிலான காலணிகளை அணிந்து வரக் கூடாது.

ஹால் டிக்கெட்:

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் ரகசிய குறியீடை பதிவு செய்து ஹால் டிக்கெட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

English summary
NEET admit card released at cbseneet.nic.in

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia