இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு (NEET UG 2020) மே மாதம் 3 ஆம் தேதியன்று நடைபெறவிருந்தது. இத்தேர்வுக்கு நாடு முழுவதும் இருந்து சுமார் 15.93 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியாகாமலிருந்தது. மேலும், ஹால் டிக்கெட் எப்போது வெளியிடப்படும் என்ற தகவலும் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இதனிடையே, மே மாதம் நடைபெறுவதாக இருந்த நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், புதிய தேர்வு தேதி குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












