நீட் 2018 நுழைவு தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு

Posted By:

நீட் தேர்வு குறித்து அறிவிக்கை வெளியிட சிபிஎஸ்சி திட்டமிட்டுள்ளது.

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு தேதி குறித்து சிபிஎஸ்சி ஜனவரி இறுதிவாரத்தில் அறிவிக்கும் என தகவல்கள் கிடைத்துள்ளன. 2018 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி அட்டவணைகள் இந்த மாத இறுதிக்குள் சிபிஎஸ்சி அறிவிக்கும் என எதிர்ப்பார்புகள் இருப்பதாக வல்லுநர்கள் அறிவித்துள்ளனர்.

நீட் நுழைவு தேர்வு  அட்டவணைகள் சிபிஎஸ்சி வெளியிட உத்தரவு

2017 ஆம் ஆண்டு ஆன்லைன் பதிவுக்கான நீட் தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரி 31 அன்று அறிவிக்கப்பட்டது. மார்ச் 31 வரை நீட் தேர்வுக்கான பதிவு செய்யும் தேதிகள் தொடர்ந்தன. 2017 ஆம் ஆண்டிற்க்கான நீட் தேர்வானது மே 7 ஆம் தேதி நடந்தது.

நீட் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியிடப்படவில்லை என்றாலும் அதற்க்கான வாய்ப்புகள் இருக்கின்றது . நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இருக்கும் மாணவர்களே தேவையான அனைத்து சான்றிதழ் நகழ்கலை தயார் செய்து வைத்து கொள்ளவும்.

நீட் தேர்வு இந்திய அளவில் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் இணைந்து நடத்தப்படுகின்றது. ஹிந்தி, இங்கிலிஷ், உருது, மராத்தி, ஒரியா, பெங்காலி, ஆசாமி, தெழுங்கு, தமிழ், கன்னடா போன்ற மொழிகளில் தேர்வு எழுதலாம்.

நீட் தேர்வு எழுதுவதற்கு ஆல் இந்தியா கோட்டா சீட்கள் உள்ளன
மாநில கோட்டா சீட்கள் உள்ளன
ஸ்டேட் மேனேஜ் மெண்ட் / என்ஆர்ஐ கோட்டா சீட்கள் , தனியார் மற்றும் மெடிக்கல் / டெண்டல் காலேஜ் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் கோட்டா உள்ளது.

தகுதி :

கல்வி தகுதி பணிரெண்டம் வகுப்பு தேர்ச்சி அத்துடன் பிசிக்ஸ், கெமிஸ்டரி, பையாலஜி, பையோ டெக்னாலஜி மற்றும் ஆங்கிலம் போன்ற துறைகள் பாடமாக படித்திருக்க வேண்டும்.
50 சதவிகித மதிபெண்கள் பிசிக்ஸ், கெமிஸ்டரி, பயாலஜி, பயோ டெக்னாலஜி பிரிவில் மதிபெண்கள் இருக்க வேண்டும்.

ஆதார் கார்டு தேவை குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சிபிஎஸ்சி ஆதார் கார்டு குறித்தும் அறிவித்துள்ளது.. ஜம்மு காஷ்மீர் அஸ்ஸாம் மற்றும் மேகாலயா போன்ற மாநிலங்களுக்கு இது பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு சிபிஎஸ்சி அறிவித்துள்ள வயது வரம்பானது 25 வருடமாகும்.

நீட் தேர்வு மற்றும் அதனால தேர்வு பெறாத அனிதா இறப்பு , நன்கு படித்தும் நீட் தேர்வில் தேர்வாகத மாணவர்கள் மிகுந்த மனஉலைச்சலுக்கு ஆளாகும் அவலம் தோன்றியது. அதனால் நீட் தேர்வுக்கு எதிரான வழக்குகள் தொடுக்கப்பட்டன் அத்துடன் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி அறிவிப்புகள தமிழக அரசும் தொடர்ந்து அறிவித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்துள்ளது.

சார்ந்த பதிவுகள்:

மருத்துவ மேல்ப்படிப்புக்கான நீட் தேர்வு ஜனவரி 7ல் தொடக்கம் !

ஆண்டு தேர்வுக்காக படிக்கும் மாணவர்களே உங்களுக்கான குறிப்பு

English summary
here article tells about Neet Exams Date announcement

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia