மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டிற்கான கவுன்சிலிங் இன்று முதல் ஆரம்பம்...!

Posted By:

சென்னை : மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டிற்கான கவுன்சிலிங் இன்று (ஜூலை 3) மதியம் 12.00 மணிக்கு ஆரம்பமானது.

ஜூலை 3ந் தேதி இன்று முதல் ஜூலை 11ந் தேதி வரை ஆன்லைனில் அகில இந்திய இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மருத்துவப் படிப்பிற்கான ஆன்லைன் கலந்தாய்வு ஆரம்பமானது. இந்த கலந்தாய்வு அகில இந்திய இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வாகும்.

 மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டிற்கான கவுன்சிலிங் இன்று முதல் ஆரம்பம்...!

ஜூலை 12ந் தேதி மாணவ மாணவியர்கள் கல்லூரியைத் தேர்வை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 13 மற்றும் 14ந் தேதிகளில் மாணவ மாணவியர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 15 முதல் கட்ட கலந்தாய்விற்கான முடிவு வெளியிடப்படும் என மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு விபரங்களும் அறிவிக்கப்படும்.

கலந்தாய்வு அட்டவணை விபரங்களையும் மாணவ மாணவியர்கள் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திற்கான இடஒதுக்கிடு அறிவிக்கப்படவில்லை

English summary
Above article mentioned that NEET 2017 Counselling Begins Today, Results to be Announced on July 15

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia