சென்னை: வடகிழக்கு மின் சக்தி கழகத்தில் (நீப்கோ) பயிற்சி என்ஜினீயர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
நீப்கோ மின் கழகமான 1976-ல் தொடங்கப்பட்டது. மத்திய மின்சக்தித் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நிறுவனம் நீப்கோவாகும். 1130 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது இந்த மின்கழகம்.

தகுதியும், திறமையும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 17-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலாளர், பியற்சி என்ஜினீயர், டிரைனி அக்கவுன்ட்ஸ் ஆபீஸர், மெடிக்கல் ஆபீஸர், செக்யூரிட்டி ஆபீஸர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை தபால் மூலம் Post Box No.89 at GPO, Shillong - 793001(Meghalaya) என்ற முகவரிக்கு ஜனவரி 17-க்குள் அனுப்புவது நலம்.
அபராதத்துடன் விண்ணப்பத்தை ஜனவரி 18-ம் தேதி வரை அனுப்பலாம்.
வயது, கல்வித் தகுதி போன்ற விவரங்களுக்காக neepco.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












