தமிழகத்தில் இளநிலை பொறியியல் (இன்ஜினியரிங்) பட்டப்படிப்பில் சேர்வதற்கு மாணவ, மாணவிகளிடையே அதிக அளவில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வுக்கு இதுவரை சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். கூடுதல் விவரங்களுக்கு www.tneaonline.org என்ற இணையதள முகவரியை மாணவர்கள் தொடர்புகொண்டு அறியலாம்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் நல்ல முறையில் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் பிஇ, பிடெக் போன்ற இளநிலை பொறியியல் படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச் சாளர முறையில் (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் வரும் ஆகஸ்ட் மாதம் இணைய வழி முறையில் நடத்தப்பட உள்ளது.

ந்நிலையில் கவுன்சிலிங்குக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 6-ம் தேதி சிறப்பான முறையில் தொடங்கியது.
இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க சுமார் 1 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
கடந்த 11-ம் தேதி மாலை 7 மணி நிலவரப்படி 94,939 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். அதில் 51,857 பேர் விண்ணப்பக் கட்டணங்களையும் செலுத்தி உள்ளனர்.
மேலும், 24,843 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். பொறியியல் கல்லூரி இடங்களுக்கான கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் ஜூன் 6-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து விருப்பம் உள்ளவர்கள் www.tneaonline.org எனும் இணையதளம் வாயிலாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இணைய வசதியில்லாதவர்கள் சிறப்பு சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று பொறியயல் கவுன்சிலிங் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications












