ஐடிஐ படித்தவர்களுக்கு நிலக்கரி நிறுவனத்தில் பயிற்சி பணி

Posted By:

சென்னை : நிலக்கரி நிறுவனத்தில் பயிற்சிக் பணிகளுக்கு 432 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐடிஐ முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நார்தன் கோல் பீல்ட்ஸ் லிமிடெட் (என்.சி.எல்) மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

ஐடிஐ படித்தவர்களுக்கு நிலக்கரி நிறுவனத்தில் பயிற்சி பணி

தற்போது மத்திய பிரதேச மாநிலம் சிங்குருலியில் செயல்படும் நிலக்கரி சுரங்கத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தம் 432 காலியிடங்களுக்கான பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிப்பிரிவு வாரியாக பிட்டர் பணிக்கு 240 பேரும், வெல்டர் பணிக்கு 48 பேரும் எலக்ட்ரீசியன் பணிக்கு 144 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி -

10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பிட்டர், எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் வெல்டர் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு -

16 வயது முதல் 24 வயதிற்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், வயது வரம்பில் சலுகை அளிக்கப்படுகிறது. 01.04.2017ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

விண்ணப்பிக்கும் முறை -

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ்களை சுய சான்றொப்பம் செய்து இணைத்து அனுப்ப வேண்டும். அஞ்சல் முகப்பில் விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிட வேண்டும். விரைவு தபால் மற்றும் சாதாரண தபால் முறையில் அஞ்சல் வழியாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

ஜெனரல் மேனேஜர் (ஹெச்ஆர்டி),
சிஇடிஐ, என்.சி.எல் ஹெச்.கியூ,
சிங்குருலி,
மத்திய பிரதேசம் - 486889.

விண்ணப்பதாரார்கள் 13.04.2017ம் தேதிக்குள் விண்ணப்பம் மேற்கண்ட முகவரியைச் சென்றடையுமாறு அனுப்ப வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தைச் சென்றுப் பார்க்கவும்.

English summary
Human Resource and Development, Northern Coalfields Limited (NCL), Singrauli has published notification for the recruitment of 432 Apprentice vacancies. Eligible candidates may apply in prescribed application format on or before 13-04-2017 by 05:00 PM.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia