நாட்டில் பதிப்புரிமை சட்டத்தை மீறும் வகையில் என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களை அனுமதியின்றி அச்சிட்டு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசியக் கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதுதொடர்பாக தகவல் தெரிந்தால் என்சிஇஆர்டிக்கு பொதுமக்கள் புகார் அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்சிஇஆர்டி-யின் இந்த எச்சரிக்கையால் போலி பாடநூல் தயாரிப்பாளர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளி மாணவர்களுக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலானது (என்.சி.இ.ஆர்.டி.) பாடப்புத்தகங்களை அச்சிட்டு அவர்களுக்கு வழங்கி வருகிறது. இவை பள்ளிகள் மூலமாகவும், தனியாக சந்தையிலும் கிடைக்கும் வகையில் புத்தகங்கள் கிடைக்கின்றன.

இந்நிலையில் என்.சி.இ.ஆர்.டி.யின் போலி பாட புத்தகங்கள் நடமாட்டம் நாடு முழுவதும் இருப்பதாக புகார்கள் வந்து கொண்டே இருந்தன. அதன் அடிப்படையில், என்சிஇஆர்டி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தேசியக் கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) இணையதளத்தில் காணப்படும் பாடப்புத்தகங்களை சில சுயநல வெளியீட்டாளர்கள், என்சிஇஆர்டியின் அனுமதியின்றி தங்கள் பெயரை போட்டு அச்சிட்டு அதை நூலாக வெளியிட்டு வருகிறார்கள்.
இது தவறானது. அப்படி எங்கள் பாடப்புத்தகங்களை முழுமையாகவோ, பகுதியாகவோ அச்சிட்டு விற்பனை செய்பவர்கள், முறையான பதிப்புரிமை அனுமதி பெறாமல், பாடப்புத்தகத்தின் உள்ளடக்கத்தை தங்களது பதிப்புகளில் பயன்படுத்துபவர்கள் ஆகியோர் பதிப்புரிமை சட்டத்தை மீறியவர்கள் ஆவர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்கள் மீது பதிப்புரிமை சட்டத்தின்கீழ் சட்டரீதியான நடவடிக்கையை நாங்கள் முயற்சித்து வருகிறோம். இந்த விஷயத்தில் மாணவர்களும், பெற்றோரும் கவனமாக இருத்தல் அவசியம். அதேபோல், இத்தகைய போலி பாடப்புத்தகங்களில் உள்ளடக்கம் தவறாக இருக்கலாம். பள்ளி கல்விக்கான தேசிய பாடத்திட்டத்தின் அடிப்படை கொள்கைக்கு எதிரானதாக இருக்கலாம். ஆகவே, பொதுமக்கள் இத்தகைய போலி புத்தகங்களை வாங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். சந்தைகளில் புத்தகங்களை வாங்கும்போது நன்கு கவனித்து வாங்கவும்.
யாரேனும் இந்த போலி புத்தகங்களையோ, ஒர்க்புக்கையோ கண்டால், என்.சி.இ.ஆர்.டி.க்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். என்சிஇஆர்டி-யின் இந்த எச்சரிக்கையால் போலி பாடநூல் தயாரிப்பாளர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications












