என்பிசிசி நிறுவனத்தில் காத்திருக்கும் பணியிடங்கள்!!

Posted By:

சென்னை: நேஷனல் பில்டிங்க்ஸ் கன்ஸ்டிரக்ஷன் கார்ப்பொரேஷன் நிறுவனத்தில் (என்பிசிசி) சீனியர் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர், எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 29-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

சீனியர் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் பணியிடத்துக்கு மொத்தம் 3 இடங்களும், எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் பணியிடத்துக்கு மொத்தம் ஒரு இடமும் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை the General Manager (HRM), NBCC Ltd., NBCC Bhawan, Lodhi Road, New Delhi - 110003 என்ற முகவரிக்கு பிப்ரவரி 29-ம் தேதிக்குள் அனுப்புதல் நலம்.

என்பிசிசி நிறுவனம், நவரத்னா விருது பெற்ற மத்திய அரசுத்துறை நிறுவனமாகும். ரியல் எஸ்டேட் மேம்பாடு, கட்டுமானத் தொழில் வர்த்தக மேம்பாடு ஆகியவற்றில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. மேலும் கட்டுமான வர்த்தகம் தொடர்பான ஆலோசனைகளையும் இது வழங்கி வருகிறது. இராக், லிபியா, நேபாளம், மொரீஷியஸ், துருக்கி, போத்ஸ்வானா, மாலத்தீவு, யேமன் நாடுகளிலும் கட்டுமான தொழில்களை என்பிசிசி செய்து வருகிறது.

English summary
National Buildings Construction Corporation Limited (NBCC) invited application for Executive Director and Sr. Executive Director Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 29 February 2016. Vacancy Details Sr. Executive Director (Engineering. - Civil): 03 Posts Executive Director (Finance): 01 Post Eligibility Criteria Educational Qualification & Experience: Sr. Executive Director (Engineering. - Civil): Age limit for Executive Director (Finance) Below 54 years.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia