உயர்கல்வி பயில உதவித்தொகை: தேசிய திறனறித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Posted By:

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்க தேசிய திறனறித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வுக்கு இன்று (ஆக.20) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2015-16-ஆம் கல்வியாண்டுக்கான மாநில அளவிலான தேசிய திறனறி முதல் கட்டத் தேர்வு நவம்பர் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து ஆகஸ்ட் 31 வரை மாணவர்கள் பதிவிறக்கம் செய்யலாம். தேவையான ஆவணங்களுடன் அந்த விண்ணப்பங்களை மாணவர்கள் பூர்த்தி செய்யவேண்டும்.

உயர்கல்வி பயில உதவித்தொகை: தேசிய திறனறித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 31-க்குள் அந்தந்த பள்ளியின் தலைமையாசிரியர்களிடம் ரூ.50 கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தை மாணவர்கள் பார்த்து அறிந்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

English summary
National Talent Search Examination will be conducted for students in November. In this regard students can apply for the exams from today. For more details students can logon into www.dge.tn.gov.in

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia