தேசிய புலனாய்வு ஏஜென்சியில் நல்ல வேலை காத்திருக்கு..!!

Posted By:

சென்னை: தேசிய புலனாய்வு ஏஜென்சியில்(என்ஐஏ) சீனியர் செகரட்டரி பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூன் 6-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

தேசிய புலனாய்வு ஏஜென்சியில் நல்ல வேலை காத்திருக்கு..!!

நாட்டில் பயங்கரவாதத்தைத் தடுக்கவும், பல்வேறு பெரிய வழக்குகளை விசாரிக்கும் அமைப்பாகவும் இருக்கிறது என்ஐஏ. மத்திய அரசின் முக்கிய விசாரணை அமைப்பாக இது திகழ்கிறது.

நாட்டில் பயங்கரவாதத்தை வேரறுக்க நாட்டில் எங்கு வேண்டுமானாலும் மாநில அரசுகளின் அனுமதி பெறாமலேயே விசாரணையை நடத்தும் அதிகாரம் என்ஐஏ-வுக்கு உள்ளது.

இந்த என்ஐஏ-வில் தற்போது சீனியர் பிரைவேட் செகரட்டரி பணியிடங்கள் காலியாகவுள்ளன. மொத்தம் 7 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை the DIG (Adm), NIA HQ, 7th floor, NDCC-II Building, Jai Singh Road, New Delhi-110001 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற பிற விவரங்களை http://www.nia.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

தேர்வு செய்யப்படும் நபர்களின் விவரங்கள் இணையதள முகவரியில் வெளியிடப்படும்.

English summary
National Investigation Agency (NIA) invited applications for 07 Sr Private Secretary Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 06 June 2016 (02 months from the date of publication of advertisement).

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia