ஜேம்ஸ்பாண்ட் ஆக உங்களுக்கும் ஒரு வாய்ப்பு... தேசிய புலனாய்வு நிறுவனம் அழைக்கிறது!

Posted By:

சென்னை: தேசிய புலனாய்வு அமைப்பில்(என்ஐஏ) பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய புலனாய்வு அமைப்பாக செயல்பட்டு வருகிறது தேசிய புலனாய்வு அமைப்பு எனப்படும் என்ஐஏ. நாட்டின் எல்லைகள், பல்வேறு அலுவலகங்கள் என என்ஐஏ அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். விசாரணைப் பணி மட்டுமல்லாமல் உளவுப் பணியிலும் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டு நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

இத்தகைய என்ஐஏ-வில் பணிவாய்ப்பு இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கிரைம் சீன் அசிஸ்டெண்ட் என்ற பதவியில் 4 காலியிடங்களும், போட்டோகிராபர் பதவியில் 5 காலியிடங்களும் உள்ளன.

ஜேம்ஸ்பாண்ட் ஆக உங்களுக்கும் ஒரு வாய்ப்பு... தேசிய புலனாய்வு நிறுவனம் அழைக்கிறது!

கிரைம் சீன் அசிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பயோ டெக்னாலஜி அல்லது அனலிட்டிக்கல் கெமிஸ்ட்ரி, பாரன்சிக் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து மாஸ்டர் டிகிரி பெற்றிருக்கவேண்டும்.

போட்டோகிராபர் பணியிடத்துக்கு அங்கீகாரம் பெற்ற இன்ஸ்டிடியூட்டிலிருந்து போட்டகிராபி துறையில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

56 வயதுக்குள் இருக்கவேண்டும். கிரைம் சீன் அசிஸ்டெண்ட் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.9,300 -ரூ.34,800, ரூ. 4600 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

போட்டோகிராபர் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.9,300 -ரூ.34,800, ரூ. 4200 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

விருப்பப்படும் நபர்கள் தங்களது சுய விவரத்தை, சம்பந்தப்பட்ட சான்றிதழ்களுடன் இணைத்து DIG(Adm), NIA HQ, 7th Floor , NDCC-II Building, Jai Singh Road, New Delhi -110001 என்ற முகவரிக்கு 2 மாதங்களுக்குள் அனுப்பவேண்டும்.

English summary
National Investigation Agency (NIA) invited applications from Indian nationals for filling up of 9 posts on deputation basis. Eligible candidates can send their application within 2 months of publication of this advertisement in Employment News. Details of Posts Crime Scene Assistant: 4 Posts Photographer: 5 Posts Educational Qualification Crime Scene Assistant: The candidate must have a Master's degree in Bio-Technology/Analytical Chemistry or Physics / Forensic science from a recognized University. Photographer: The candidate must have a Degree in Graduation from a recognized University and a Diploma in Photography from a recognized Institute.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia