பெங்களூர் தேசிய டிசைன் இன்ஸ்டிடியூட்டில் கலாசாரத் திருவிழா

Posted By:

புதுடெல்லி: கர்நாடக மாநிலம் பெங்களூரிலுள்ள தேசிய டிசைன் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வாளகத்தில் ஆண்டு டிசைன் மற்றும் கலாசாரத் திருவிழா நடைபெறவுள்ளது.

மார்ச் 19, 20 ஆகிய தேதிகளில் இந்த திருவிழா நடைபெறவுள்ளது. பயிலரங்குகள், போட்டிகள், மாணவர்களின் கைத்திறன் வேலைப்பாடுகளை இதில் பார்க்க முடியும்.

பெங்களூர் தேசிய டிசைன் இன்ஸ்டிடியூட்டில் கலாசாரத் திருவிழா

மாணவர்கள், தொழில்முனைவோர், கலைஞர்கள், டிசைனர்கள், டெக்னாலஜிஸ்டுகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்க முடியும். பங்கேற்க விரும்புவோர் தேசிய டிசைன் இன்ஸ்டிடியூட் இணையதளத்தில் பெயரைப் பதிவு செய்துகொள்ளவேண்டும்.

முதல் நாள் நடத்தப்படும் கேலரியில், மாணவர்களின் கைத்திறன்கள் அடங்கிய படங்கள் காட்சிக்கு வைக்கப்படும். இதைத் தொடர்ந்து விவாதங்கள், பயிலரங்குகள் நடைபெறும்.

2-ம் நாள் டிசைன் கண்காட்சி நடைபெறவுள்ளது. பெயரைப் பதிவு செய்ய விரும்புபவர்கள் http://www.dfrostnid.com/ என்ற இணையதளத்துக்குச் செல்லலாம்.

English summary
National Institute of Design R&D campus, Bangalore is hosting Dfrost, the annual design and cultural festival. The two-day festival is scheduled to be held on 19th March and 20th March 2016. The festival, aims to provide a platform to foster the understanding of design and its relevance in today's world, through workshops, competitions and display of students' works."Transformation by Amalgamation" being the theme for D'frost 2016, describes National Institute of Design's vision of what the event should mean for all.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia