என்.சி.ஹெச்.எம் ஹாஸ்பிடாலிட்டி கோர்ஸ்ஸில் சேர உங்களுக்கு விருப்பமா?

Posted By:

சென்னை: மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக செயல்படும் நேஷனல் கவுன்சில் பார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்ரிங் டெக்னாலஜி நிறுவனம் 2017ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

என்.சி.ஹெச்.எம் ஜாயிண்ட் எண்ட்ரன்ஸ் எக்சாம் எழுதுவதற்கான தகுதிகள் -

கோர்ஸ் பெயர் - பி.எஸ்சி ஹாஸ்பிடாலிட்டி அண்ட் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன்

என்.சி.ஹெச்.எம் ஹாஸ்பிடாலிட்டி கோர்ஸ்ஸில் சேர உங்களுக்கு விருப்பமா?

வயது வரம்பு - அதிகபட்சம் 22 வயதிற்குள் இருப்பவர்கள் பி.எஸ்சி ஹாஸ்பிடாலிட்டி அண்ட் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி - ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்து பயின்று 12ம் வகுப்பில் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு முறை -

என்.சி.ஹெச்.எம் ஜெஇஇ தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இதில் 200 கேள்விகள் 200 மார்க்கிற்கு கேட்கப்படும். தவறான கேள்விகளுக்கு 0.25 மார்க் மைனஸ் செய்யப்படும். என்.சி.ஹெச்.எம் ஜெஇஇ தேர்வு நாடு முழுவதும் மொத்தம் 33 இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேர்க்கை முறை - எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல், மெரீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நேர்க்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்க்காணலுக்கு அழைக்கப்படுபவர்கள் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பி.எஸ்சி ஹாஸ்பிடாலிட்டி அண்ட் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் கோர்ஸில் சேர்க்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள் - பி.எஸ்சி ஹாஸ்பிடாலிட்டி அண்ட் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் கோர்ஸில் சேர விரும்புபவர்கள் ஏப்ரல் 14ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

19 ஏப்ரல் 2017ம் தேதி நுழைவுச் சீட்டு வழங்கப்படும். ஏப்ரல் 29ம் தேதி என்.சி.ஹெச்.எம் ஜெஇஇ தேர்வு நடைபெறும்.

மே மாதம் 3வது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மே மாதம் கடைசி வாரம் அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்தில் கவுன்சிலிங் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு www.nchm.nic.in என்ற இணைதள முகவரியை சென்றுப் பார்க்கவும்.

English summary
The exam conducting authority will be shortlisting candidates on basis of marks and ranks obtained in NCHM JEE 2017. A merit list will be prepared on basis of results of NCHM JEE 2017 and candidates securing higher marks will be ranked higher in the merit list.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia