பி.ஆர்க் படிப்பில் சேர உதவும் நேட்டா தேர்வு: முக்கிய மாற்றங்கள் அறிவிப்பு!!

Posted By:

டெல்லி: பி.ஆர்க் படிப்பில் மாணவ, மாணவிகள் சேர உதவும் தி நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் ஃபார் ஆர்க்கிடெக்ச்சர் (நேட்டா) என்ற தேசிய அளவிலான தகுதித் தேர்வில் சில மாற்றங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

நேட்டா தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் பி.ஆர்க் படிப்பில் நாடு முழுவதிலுமுள்ள கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தத் தேர்வில் சில முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பி.ஆர்க் படிப்பில் சேர உதவும் நேட்டா தேர்வு: முக்கிய மாற்றங்கள் அறிவிப்பு!!

ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன.

அந்த மாற்றங்கள் வருமாறு:

* இனி நேட்டா தேர்வை 2 ஆண்டுகளுக்கு 5 முறை மட்டுமே எழுத முடியும்.

* அந்த 5 தேர்வுகளில் எது சிறந்த மதிப்பெண் பெற்ற தேர்வோ அதையே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

* நேட்டா இணையதளத்துக்குச் சென்று மாணவர்கள் தங்களது பெயர்களை ஆன்-லைனில் பதிவு செய்யவேண்டும். இதற்காக புதிய விண்ணப்பம் ஆன்-லைனில் உள்ளது. இதற்காக கட்டணமும் செலுத்தவேண்டும்.

* 5 தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற தேர்வு, அடுத்த 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அவர்கள் முதலாவதாக எழுதிய தேர்விலிருந்த இந்த 2 ஆண்டு கணக்கு இருக்கும்.

* சரியான விவரங்களைத் தர தவறிய மாணவர்களின் பழைய தேர்வு முடிவுகள் ரத்தானகா அறிவிக்கப்படும். மேலும் அடுத்த நேட்டா தேர்வையும் அவர்கள் எழுத முடியாது.

இவையே புதிய மாற்றங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நேட்டா தேர்வுக்குப் பதிவு செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 18 ஆகும்.

English summary
The Council of Architecture has announced important changes in NATA 2016 examination. According to the official website changes will be effective from April 1, 2016. The National Aptitude Test for Architecture (NATA), is a national level test conducted to offer admission to Bachelor of Architecture (B. Arch) degree programmes to various government, unaided schools or colleges and government-aided institutes of architecture across India.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia