என்ஏஎல் நிறுவனத்தில் டெக்னீஷியன் வேலை இருக்கு...!!

Posted By:

புதுடெல்லி: பெங்களூரிலுள்ள நேஷனல் ஏரோஸ்பேஸ் லெபாரட்டரீஸ் (என்ஏஎல்) நிறுவனத்தில் டெக்னீஷியன் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஏப்ரல் 18-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.

என்ஏஎல் நிறுவனத்தில் டெக்னீஷியன் வேலை இருக்கு...!!

மொத்தம் 6 டெக்னீஷியன் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மேலும் ஐடிஐ படிப்பும் முடித்திருக்கவேண்டும். கூடுதலாக 2 ஆண்டு பணி அனுபவமும் இருக்கவேண்டும். வயது 28-க்கு மிகாமல் இருக்கவேண்டும். சம்பளம் ரூ.20 ஆயிரம் (உத்தேசத் தொகை) வழங்கப்படும்.

இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை The Administrative Officer, CSIR National Aerospace laboratories, Post No.1779, HAL Airport Road, Kodihalli, Bengaluru - 560 017 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி ஏப்ரல் 18 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு http://www.nal.res.in/ என்ற இணையதளத்தில் தொடர்புகொள்ளலாம்.

English summary
Applications are invited by National Aerospace Laboratories. NAL is looking out for 6 Technician Posts. To know more about pay scale, eligibility, how to apply, selection procedure and important dates scroll down. Notification Details: Advertisement No: 2/2016 Name of the Post: Technician. Number of Posts: 6 Posts. Who is Eligible for the NAL Job? Qualification: Candidates applying for this post and job should have completed their SSLC or 10th with a minimum score of 55%. Along with this they need to have an ITI certificate in trade or they can also have State trade certificate.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia