நேஷனல் ஏரோஸ்பேஸ் லெபாரட்டரியில் காத்திருக்கும் விஞ்ஞானி வாய்ப்பு!!

Posted By:

சென்னை: நாட்டின் மிக உயரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களி்ல ஒன்றான நேஷனல் ஏரோஸ்பேஸ் லெபாரட்டரியில்(என்ஏஎல்) விஞ்ஞானி பணியிடங்கள் காத்திருக்கின்றன.

பெங்களூரிலிருந்து செயல்பட்டு வரும் நேஷனல் ஏரோஸ்பேஸ் லெபாரட்டரியில் பல்வேறு துறைகளில் விஞ்ஞானி பணியிடங்கள் உள்ளன. இந்த பணியில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நேஷனல் ஏரோஸ்பேஸ் லெபாரட்டரியில் காத்திருக்கும் விஞ்ஞானி வாய்ப்பு!!

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மெக்கானிக், மானுபாக்ச்சரிங், டிசைன் என்ஜினீயரிங் போன்ற ஏதாவதொரு துறையில் எம்.இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயது 32க்குள் இருக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இம்மாதம் 17 ஆகும்.

மேலும் இந்தப் பணியிடங்கள் தொடர்பான முழு விவரங்களை www.nal.res.in என்ற இணையதளத்தை தொடர்புகொண்டு அறியலாம்.

English summary
National Aerospace Laboratories (NAL), Bengalure has invites applications for scientist posts. For more details students can logon into www.nal.res.in

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia