சந்திரபாபு நாயுடு முயற்சியில் கேம்பிரிட்ஜ் பல்கலை.யுடன் ஆந்திர அரசு ஒப்பந்தம்!

Posted By:

சென்னை: ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் முயற்சியால் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன், ஆந்திர மாநில அரசு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், உலக அளவில் கல்விச் சேவையில் பிரசித்தமானது. இந்த பல்கலைக்கழகத்துக்கு ஆந்திர மாநில முதல்வர் நாயுடு, சென்றுள்ளார். டாவோஸில் நடைபெற்ற சந்திப்பில் பல்கலைக்கழக துணைவேந்தர் சர் லெஸ்ஸக் போரிசிவிக்ஸை, சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் 46-வது உச்சி மாநாட்டின்போது இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

சந்திரபாபு நாயுடு முயற்சியில் கேம்பிரிட்ஜ் பல்கலை.யுடன் ஆந்திர அரசு ஒப்பந்தம்!

கல்வித்துறையில் ஆந்திர மாநிலத்திலுள்ள கல்வி நிறுவனங்களுக்கு உதவ கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உதவவேண்டும் என்று அப்போது அவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக துணைவேந்தரும் ஒப்புக்கொண்டார்.

ஆந்திர மாநிலத்தை கல்வி மையமாக மாற்றுவதற்கு கேம்பிரிட்ஜ் உதவவேண்டும் என்றும் நாயுடு கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்துக்கு பிரதிநிதிகள் குழுவை அனுப்ப துணைவேந்தர் சர் லெஸ்ஸக் போரிசிவிக்ஸ் ஒப்புக்கொண்டார்.

ஆந்திர மாநில அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The University of Cambridge has agreed to explore prospects for cooperation with Andhra Pradesh Government in the field of education. Chief Minister Chandrababu Naidu today met Cambridge University Vice-Chancellor Sir Leszek Borysiewicz in Davos and the two discussed issues related to education, the State Government's Information and Public Relations Department said in a statement here.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia