டெல்லி: நபார்டு வங்கியில் 115 மேலாலர் பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை ஏப்ரல் 4-ம் தேதிக்குள் அனுப்பவ ேண்டும்.
115 மேலாளர் பணியிடங்கள், உதவி மேலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளன.

விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் அனுப்பவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக மேலாளர் பதவிக்கு ரூ.750 வசூலிக்கப்படும். மற்ற பணியிடங்களுக்கு ரூ.850 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 செலுத்தினால் போதும்.
விருப்பம் உள்ளவர் நபார்டு வங்கியின் இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பங்களை டவுன்லோடு செய்துகொள்ளலாம். பின்னர் தகுந்த ஆவணங்களுடன் தபால் மூலம் அனுப்பலாம்.
ஆன்-லைனிலும் விண்ணப்பங்களை அனுப்பலாம். ஏப்ரல் 4-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற விவரங்களைப் பெற நபார்டு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.nabard.org/english/home.aspx -ல் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
